ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் செய்யப்படவிருந்த நிலையில், மத்திய அரசு தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, சுங்க சாவடிகளில் பாஸ்டேக் தவிர ரொக்கம் உள்பட வேறு எந்த ஒரு வழியிலும் கட்டணம் ஏற்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இன்னமும் பாஸ்டேக்கிற்கு மாறவில்லை. அவர்கள் ரொக்கமாகவே இன்னமும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் பாஸ்டேக் மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளின் அளவு 75 முதல் 80 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. அதாவது 100 வாகனங்களில் சுமாராக 75-80 வாகனங்களுக்கு மட்டுமே பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

இதர வாகனங்களுக்கு ரொக்கமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியின் அடிப்படையில்தான் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே ஜனவரி 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என நேற்று (டிசம்பர் 30ம் தேதி) அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

இதன்படி வாகன உரிமையாளர்களுக்கு சுமார் 1 மாதம் கூடுதல் கால அவகாசமாக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த சூழலில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வாகன உரிமையாளர்கள் எதிர்பார்த்தபடியே பாஸ்டேக் கட்டாயம் செய்யப்படுவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

1 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், 45 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதிதான் பாஸ்டேக் கட்டாயமாகிறது. எனவே வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அதற்கு பிறகு பாஸ்டேக் கட்டாயம் செய்யப்பட்டு விடும்.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

எனவே வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் வாகன உரிமையாளர்கள் அனைவரும் பாஸ்டேக் வாங்கி விடுவது நல்லது. ஆனால் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வருவதை அரசு ஒத்திவைப்பது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாகவும் ஒரு தேதியை அறிவித்து விட்டு, அதன் பின்னர் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

ஆனால் பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் 100 சதவீத பரிவர்த்தனைகளையும் பாஸ்டேக் மூலமாக மேற்கொள்வதற்கான அனைத்து வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. எனவே இனி தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான்.

ஜனவரி 1 முதல் பாஸ்டேக் தவிர வேறு எந்த வழியிலும் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாதா? மத்திய அரசு புதிய உத்தரவு!

பாஸ்டேக் மூலமாக சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். எனவே வாகன ஓட்டிகளின் நேரமும், எரிபொருளும் சேமிக்கப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் பாஸ்டேக் உறுதி செய்யும். இதுபோன்ற பல்வேறு நன்மைகள் இருப்பதன் காரணமாகவே பாஸ்டேக் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 31, 2020, 14:50 [IST]
English summary
FASTag Deadline Extended To February 15 - Here Are All Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+