Fastag Hidden Feature: திருடுபோன காரை ஃபாஸ்ட்டேக் கார்டை வச்சே கண்டுபிடிக்கலாமா? எப்படி தெரியுமா?
இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக ஃபாஸ்ட்டேக் அமலில் இருக்கிறது. இன்று இந்தியாவில் ஓடும் 99 சதவீதமான வாகனங்களில் ஃபாஸ்ட்டேக் பொருத்தப்பட்டுள்ளது. டோல்கேட்களை வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த ஃபாஸ்ட்டேக் தான் அதற்கான பணத்தைச் செலுத்தும் கருவியாகப் பயன்படுகிறது.
இந்த ஃபாஸ்ட்டேக் கார்டை ரீசார்ஜ் செய்து கொள்வதன் மூலம் பயணிகள் தங்கள் வாகனத்தை எந்த வித இடையூறும் இல்லாமல் டோல்கேட்களை கடந்த செல்ல முடியும். நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை வாகனங்கள் சுலபமாக ஒரு சில நொடிகளில் பணம் கார்டிலிருந்து கழிக்கப்பட்டவுடன் டோல்கேட்களை கடந்து சென்றுவிடும்.

பலர் இந்த ஃபாஸ்ட்டேக் கார்கள் வெறும் டோல்கேட்டில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒரு கார்டாக மட்டுமே நினைத்த வருகின்றனர். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத ஒரு முக்கியமான அம்சமும் இந்த ஃபாஸ்ட்டேக் கார்டில் இருக்கிறது. இதன் மூலம் உங்கள் கார் திருடப்பட்டாலும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இது எப்படி எனத் தெரிந்து கொள்ளும் முன்பு நாம் இந்த ஃபாஸ்டேக் கார்டு எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஃபாஸ்ட்டேக் கார் என்பது ஒரு ஸ்டிக்கர் போல காரின் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய ஒரு பொருள். இதில் ஆர் எஃப் ஐடி கார்டு போல ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த சிப் ஒவ்வொரு முறை இந்த கார் டோல்கேட்களை கடக்கும் போதும் அங்குள்ள சிப் ரீடர்கள் மூலம் ரீட் செய்யப்பட்டு அந்த கார்டில் உள்ள கணக்கிலிருந்து அதற்கான பணத்தைக் கழித்துக்கொள்ளும். இந்த இடத்தில் தான் ஒரு டிராக்கிங் விஷயமும் நடக்கிறது. இப்படியாகப் பணம் கழிக்கப்படும் போது அத்தோடு அது நிற்பதில்லை.
அந்த பணம் கிழிக்கப்பட்டவுடன் அந்த கார்டின் உரிமையாளரின் செல்போன் எண் மற்றும் அவரது பதிவு செய்யப்பட்ட இமெயிலுக்கு இந்த பணம் கழித்தல் குறித்த மெசேஜ் செல்லும். அதில் எவ்வளவு பணம் கழிக்கப்பட்டது. மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது. எத்தனை மணிக்குப் பணம் கழிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் செல்லும்.
இத்துடன் சேர்த்து எந்த டோல்கேட்டில் இந்த வாகனம் கடந்தது என்ற தகவலும் செல்லும். ஒரு வேளை நீங்கள் கார் திருடப்பட்டால் அது டோல்கேட்டை கடக்கும் போது உங்கள் காரில் முன்னே ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்ட்டேக் கார்டு மூலம் உங்களுக்கு மெசேஜ் வருவதை வைத்து உங்கள் வாகனம் எந்த டோல்கேட்டை எத்தனை மணிக்குக் கடந்துள்ளது என்பதை வைத்து டிராக் செய்ய முடியும்.
போலீசில் புகார் செய்யும் போது இந்த தகவலை நீங்கள் குறிப்பிட்டால் அவர்கள் உடனடியாக அடுத்த டோல்கேட்டில் உள்ள போக்குவரத்து பேட்ரோலுக்கு தகவல் அனுப்பித் திருடு போன காரை உடனடியாக பிடிக்க உத்தரவிடுவார்கள். இதனால் உங்கள் காரை திருடியவர்கள் உடனடியாக மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஃபாஸ்டேக்கில் உள்ள இந்த அம்சத்தைக் காரை டிராக் செய்யப் பயன்படுத்தலாம் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. இதை நீங்கள் ஆபத்து நேரத்தில் பயன்படுத்தி உங்கள் கார் திருடப்பட்டால் உடனடியாக கண்டுபிடியுங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








