உங்க பாஸ்ட் டேக் கார்டை உடனே KYC பண்ணுங்க! ஜன. 31 தான் கடைசி தேதி!
இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்ட் டேக் கார்டுகளை உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்ய சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும். அப்டேட் செய்யப்படாத பாஸ்ட் டேக் கார்டுகள் செயலிழக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறையிலேயே பணம் வசூல் நடக்கிறது. இந்தியாவில் தற்போது 98 சதவீதமான வாகனங்கள் பாஸ்ட் டேக் கார்டுகள் பொருத்தப்பட்டு விட்டன. தற்போது வரை சுமார் 8 கோடிக்கு அதிகமான பாஸ்ட் டேக் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியது.

பணம் வசூலிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதால் இந்த சுங்கச்சாவடிகளில் வேகமாக பண வசூல் செய்ய இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. அதன் பின்னர் தற்போது 98 சதவீதமான வாகனங்கள் பாஸ்ட் டேக் கார்டு உடன் தற்போது செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் காலதாமதங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.
இதற்கு முக்கியமான காரணம் ஒரே வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் இரண்டு மூன்று பாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி ரீசார்ஜ் செய்து கொண்டு ஓடி வருகின்றனர். இதனால் அவர்கள் பாஸ்ட் கார்டை தங்கள் விண்டு ஸ்கிரீனில் ஒட்டாமல் தேவைப்படும் நேரம் எடுத்து மிஷின் அருகே காட்டி செல்கின்றனர்.

இதன் காரணமாகவும் காலதாமதம் ஏற்படுவதால் இப்படியான கார்டுகளை செயலகம் செய்ய மத்தியரசு புதிய திட்டம் ஒன்றை தற்போது கையில் எடுத்துள்ளது. அதன்படி ஒரு வாகனத்திற்கு ஒரு பாஸ்டர் கார்டு தான் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் பாஸ்டர் காடுகளை கேஒய்சி அப்டேட் செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. இப்படியா கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த பாஸ்ட் டேக் கார்டு செயல்படும்.
கேஒய்சி அப்டேட் செய்யப்படாத கார்டுகள் செயல் விளக்கமோ அல்லது பிளாக் லிஸ்ட்டோ செய்யப்படும். தற்போது பல கார்டுகளில் பேலன்ஸ் இருந்தும் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. குறிப்பிட்ட வாகனங்கள் வேறு வேறு கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது மத்திய அரசு கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் தங்கள் பாஸ்ட் டேக் கார்டை உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும். இப்படியாக கேஒய்சி அப்டேட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தொடர்ந்து காண்போம். இதை செய்வதற்கு கட்டாயம் ஒரு தேசிய அடையாள அட்டை தேவைப்படும்.
உங்களது செல்லுபடியாகும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, இவற்றில் ஏதோ ஒன்றை நீங்கள் சமர்ப்பித்து உங்கள் கேஒய்சி உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த வங்கி மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கி இருக்கிறீர்களோ அந்த வங்கியின் ஆப் உள்ளே சென்று அங்கு கேஒய்சி அப்டேட் செய்ய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் அப்டேட் செய்யலாம்.
இதுவரை உங்கள் பாஸ்ட் டேக் கார்டை ஒரு முறை கூட நீங்கள் கேஒய்சி செய்ய வில்லை என்றால் உடனடியாக ஃபாஸ்ட் டேக் இணையதளத்திற்குள் சென்று அங்கு நீங்கள் பதிவு செய்த மொபைல் மூலம் லாகின் செய்து உங்களது பாஸ்ட் டேக் கார்டு கேட்கும் ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவு செய்து அதை வைத்து செய்து கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு தற்போது பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்ட நிலையில் அனைவரும் தற்போது கேஒய்சி செய்து கொள்வது நல்லது. முதலில் பாஸ்ட் டேக் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் இதை முறைகேடாக பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு கடிவாளம் கூட இப்படியான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. உடனடியாக உங்கள் பாஸ்ட் ட்ராக் கார்டை கேஒய்சி அப்டேட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









