பாஸ்ட்டேக் கார்டுல KYV பண்ணலேன்னா டிஆக்டிவேட் ஆகிடும்! அப்படின்னா என்ன தெரியுமா?
வங்கிகளில் கேஒய்சி செய்வது போல தனி பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துபவர்கள் கேஒய்வி என்ற சரிபார்ப்பை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை செய்யாதவர்களின் ஃபாஸ்ட் டேக் கார்டு டிஆக்டிவேட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவனா விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகனங்களில் ஃபாஸ்டேக் கார்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு வைத்துள்ளது. அதன் மூலம் ரீசார்ஜ் செய்தே சுங்கசாவடிகளை கடக்க முடியும். ஃபாஸ்ட்டேக் கார்டுஇல்லாத வாகனங்கள் அதிக தொகையை செலுத்த வேண்டியது உள்ளது. இந்நிலையில் இந்த ஃபாஸ்ட்டேக் கார்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அதில் பலகட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது.

இதன்படி தற்போது ஒவ்வொரு ஃபாஸ்டேக் பயனர்களும் தங்கள் பாஸ்ட் டேக் கார்டை கேஒய்வி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்வி என்றால் ஆங்கிலத்தில் Know Your Vehicle ஆகும். அதாவது வாகனம் குறித்த முழுமையான தகவல்களை பயனர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இதை செய்யாத ஃபாஸ்ட்டேக் கார்டுகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
முக்கியமாக இதில் வாகனத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது போக வாகனத்தின் பதிவு சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேசினல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் இந்த ஃபாஸ்டேக் கார்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்களை தெரிவித்திருந்தது. அதை சரி செய்ய இப்படியான நடைமுறையை கொண்டுள்ளது.

குறிப்பாக சிறிய கார் போன்ற வாகனங்களுக்காக வாங்கப்பட்ட ஃபாஸ்டேக் கார்கள் பெரிய கமர்ஷியல் வாகனங்களில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. சுங்கசாவடிகளில் வாகனங்களின் வகைக்கு ஏற்ப சுங்க கட்டணம் இருப்பதால் குறைவான சுங்ககட்டணம் செலுத்த சில கமர்ஷியல் வாகன உரிமையாளர்கள் இதை செய்வதாக தெரியவந்துள்ளது.
இது மட்டுமல்ல சிலர் பல்வேறு வாகனங்களுக்கான டேக்கை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுங்க சாவடியிலும் அதை மாற்றி மாற்றி காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் ஃபாஸ்ட்டேக் கார்டு உரிமையாளர்கள் தங்கள் வாகனம் குறித்த தகவல்களை அரசிடம் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை வழங்கியுள்ளனர்.
இதனால் வாகனத்தின் முகப்பு போட்டோ வாகன பதிவெண் தெரிவது போல எடுத்து பதிவிட வேண்டும். மேலும் அந்த போட்டோவில் ஃபாஸ்ட்டேக் கார்டு விண்ட் ஷீல்டு பகுதியில் ஒட்டப்பட்டிருப்பது தெளிவாக தெரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக உள்பக்கம் ஃபாஸ்ட்டேக் கார்டு வாகனத்தின் விண்ட்ஷீல்டு பகுதியில் ஒட்டப்பட்ட குளோசப் புகைப்படங்கள்,வாகனத்தின் பதிவெண் சான்றிதழின் இரண்டு பக்கங்கள் எல்லாம் பதிவெற்றம் செய்யப்பட வேண்டும்.
இதை செய்யாத வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட ஃபாஸ்டேக் கார்டுகள் டிஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ட் ஷீல்டு பகுதியில் ஃபாஸ்ட்டேக் கார்டு ஒட்டாமல் இருந்தால் அந்த வாகன உரிமையாளருக்கு அபராதம் அல்லது ஃபாஸ்ட்டேக் இல்லாமல் பயணித்ததற்கான கட்டணம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கேஒய்வி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் செய்யப்படவேண்டும் அப்பொழுது தான் தரவுகள் சரியாக தற்போதைய தரவாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் ஃபாஸ்ட்டேக் வழங்கும் நிறுவனங்கள் அதை கட்டாயமாக்கமல் இருந்து வந்தது. தற்போது இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடிகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அதிக சுங்க கட்டணம் தான் இதை குறைத்தால் சுங்கசாவடிகளில் நடக்கும் முறைகேடுகள் வெகுவாக குறையும். பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்படாது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








