பாஸ்ட்டேக் கட்டாயம்: ஜனவரி 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்களுக்கு சிறிய தளர்வு... என்ன தெரியுமா?

பாஸ்ட்டேக் விஷயத்தில், வரும் ஜனவரி 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்களுக்கு சிறிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

டோல்கேட்களில் கட்டணம் செலுத்த, அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் எனவும், டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று அமலுக்கு வரவில்லை.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அதற்கு பதிலாக டிசம்பர் 15ம் தேதி முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பாஸ்ட்டேக்கிற்கு மாறுவதில் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் சனிக்கிழமையான நேற்றுடன் (டிசம்பர் 14) முடிவுக்கு வந்தது.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அதே சமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி இன்று (டிசம்பர் 15) முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயமாகியுள்ளது. பாஸ்ட்டேக் திட்டம் மூலம் வாகனங்களின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும். டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீங்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்க தேவையில்லை.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இதன் மூலமாக உங்கள் நேரம் மிச்சமாகும். மேலும் உங்கள் வாகனத்தின் எரிபொருளும் சேமிக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு ரசீது வழங்க தேவையில்லை என்பதால், காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் திட்டம் குறைக்கும்.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

டோல்கேட்களில் ரொக்கமாக கட்டணம் செலுத்தி செல்வதால், சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. இதனால் மற்ற வாகன ஓட்டிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆனால் பாஸ்ட்டேக் மூலமாக இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் டோல்கேட்களை அகற்றும்படி வலியுறுத்தி வருபவர்கள் மத்தியில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு...!

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எனினும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயமாகியுள்ளது. இது டிஜிட்டல் பணி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கப்பதாகவும் அமையும். அதே நேரத்தில் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு டோல்கேட்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

MOST READ: ஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க்... மோசடிகளை தடுக்க புதிய அதிரடி... எப்படி செயல்படும் தெரியுமா?

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எனவே உங்கள் வாகனத்திற்கு பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் சிக்கல்தான். நீங்கள் இன்னமும் பாஸ்ட்டேக்கை பெறவில்லை எனும் பட்சத்தில், உடனடியாக அதனை வாங்கி கொள்வது நல்லது. ஏனெனில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவை மிக கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

MOST READ: டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சிறிய தளர்வு: ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (டிசம்பர் 15) முதல் பாஸ்ட்டேக் கட்டாயம்தான் என்றாலும், வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 25 சதவீத டோல் லேன்களில் தொடர்ந்து ரொக்கமாக கட்டணம் ஏற்கப்படும் என்பதுதான் அந்த செய்தி. ஆனால் அதுவும் வரும் ஜனவரி 15ம் தேதி வரை மட்டும்தான்.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒவ்வொரு டோல்கேட்டிலும் குறைந்தபட்சம் 75 சதவீத லேன்கள் பாஸ்ட்டேக் லேன்களாக இருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே சமயம் 25 சதவீத லேன்கள் மட்டும் ஹைப்ரிட் லேன்களாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இவை ஹைப்ரிட் லேன்களாகவே இருக்கும்.

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி வரை இந்த லேன்களில் ரொக்கமாக கட்டணம் ஏற்கப்படும். எனவே பாஸ்ட்டேக் வாங்குவதற்கு வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சற்று கால அவகாசம் உள்ளது. எனினும் நீங்கள் தற்போது வரை பாஸ்ட்டேக் வாங்கவில்லை எனில், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அதனை வாங்கி விடுவதுதான் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நன்மை பயப்பதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
FASTag Mandatory From Today. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X