இன்று முதல் புது ரூல்ஸ் அமல்! ஃபாஸ்ட் டேக் கார்டுல இதெல்லாம் செக் பண்ணிடுங்க!

இந்தியாவில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் கார்டுகளுக்கான புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதிமுறைகள் எல்லாம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் என்னென்ன விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது? இதனால் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு என்ன விதமான பிரச்சினை ஏற்பட போகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியா முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டும் என்றால் வாகன ஓட்டிகளிடம் கட்டாயம் ஃபாஸ்ட் டேக் கார்டு இருக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்தியாவில் இயங்கும் 99 சதவீதமான வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இந்த கார்டுகளை ரீசார்ஜ் செய்து அவர்கள் சுங்க கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.

fastag new rules

இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவை இருக்கும். ஃபாஸ்ட் டேக் கார்டு இருந்தால் மட்டுமே சரியான கட்டணம் வசூலிக்கப்படும். இது நாம் அனைவருக்கும் அறிந்தது தான். இந்நிலையில் மத்திய அரசு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இதுவரை கேஒய்சி செய்யப்படாத வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் கேஒய்சி செய்ய வேண்டும் என கால அவகாசம் கொடுத்துள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு கேஒய்சி செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லாம் செயலிழக்கம் செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

fastag new rules

இதுபோக கடந்த 5 ஆண்டுகளாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது கார்டை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் கார்டு எல்லாம் செயல் இழக்கம் செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தி வரும் பழைய கார்டுகளை இனி பயன்படுத்த முடியாத எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை உடனடியாக கேஒய்சி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகள் இனி சுங்கச்சாவடிகளில் செல்லாமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸிஸ் நம்பர் ஆகியவற்றை ஃபாஸ்ட் டேக் கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இணைக்கப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகள் செயல் இழப்பு செய்யப்படும். அந்த கார்டுகளை இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பெற்று விட்டால் அடுத்த 90 நாட்களுக்குள் வாகனத்தின் பதிவெண் குறித்த தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக அப்டேட் செய்யப்படாத ஃபாஸ்ட் டேக் கார்டுகள் உடனடியாக 90 நாட்களுக்குப் பிறகு செயலிழப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வினியோகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் டேட்டாபேஸ்களை உடனடியாக சரி பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் எந்த நிறுவனத்திடம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி உள்ளீர்கள் என்பதை பார்த்து அந்த நிறுவனம் டேட்டாபேஸை சரிபார்த்து விட்டதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டு செயல் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது.

இனி ஃபாஸ்ட் டேக் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் முகப்பு மற்றும் பக்கவாட்டு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் சரியான கார்டை தான் பயன்படுத்துகிறீர்களா என்பதை மத்திய அரசால் உடனடியாக செக் செய்ய முடியும்.

இனி இந்தியாவில் இயங்கும் அத்தனை ஃபாஸ்ட் டேக் கார்டுகளும் கட்டாயம் ஒரு மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் உங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டு மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். மொபைல் நம்பருடன் இணைக்கப்படாத கார்டுகள் இனி சுங்கச்சாவடிகளில் கடந்து செல்ல முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது உள்ள ஃபாஸ்ட் டேக் கார்டு நடைமுறையில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருப்பதால் இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் யாரும் இனி முறைகேடு ஈடுபட முடியாது என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதை உடனடியாக அப்டேட் செய்து நீங்கள் உங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டு செயல் இழப்பு செய்யப்படுவதை தவிர்த்துவிடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 7:00 [IST]
English summary
Fastag new rules kyc updates vehicle linking all you need to know
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+