ஃபாஸ்ட் டேக் கார்டை இனி இப்படி தான் யூஸ் பண்ணனும்! புதிய உத்தரவை போட்ட மத்திய அரசு! இல்லேன்னா டபுள் சார்ஜ்!
இனி உங்கள் கார்களில் முன்பக்க கண்ணாடியில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் நீங்கள் இரு மடங்கு சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த வேண்டுமென தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது உள்ள ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் பலர் இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் முறைகேடு ஈடுபட்டு வருவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. முன்னர் வெறும் பணமாக மட்டும் பெறப்பட்டு வந்த சுங்க கட்டணம் தற்போது ஃபாஸ்ட் டேக் காடு முறையில் பெறப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் கார்டுகளை பொருத்திக்கொண்டு ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்தால் அதிலிருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் நடக்கிறது.

இந்த ஃபாஸ்ட் டேக் கார்டு இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்ட பின்பு தற்போது 95 சதவீதத்திற்கும் அதிகமான கார்களில் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த காரை பயன்படுத்தும் சிலர் கார்டை முன்பக்கம் உள்ள கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டாமல் வைத்திருக்கிறார்கள். இதனால் சுங்கச்சாவடிகளில் இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்ய முடியாமல் சிஸ்டம் தவிக்கிறது.
இப்படியான சூழ்நிலைகளில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்கேனரை வைத்து இப்படியான கார்டுகளை ஸ்கேன் செய்ய வேண்டியது உள்ளது. மக்கள் பல சிக்கல்களை முன்பக்க கண்ணாடியில் ஒட்டாததற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. சிலர் இந்த காரை ஸ்டிக்கராக ஒட்டி முன்பக்க கண்ணாடியை அசிங்கமாக்க விரும்பவில்லை என கூறுகிறார்கள்.

சிலர் பல்வேறு கார்களை வைத்திருக்கும் நிலையில், எந்த காரிலும் இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் வேறு வேறு கார்களுக்கு வாங்கிய ஸ்டிக்கரை வெவ்வேறு கார்களுக்கு மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயமாகும். இந்நிலையில் இது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்புகளை தற்போது சுங்கச்சாவடிகளுக்கு வழங்கி உள்ளது.
அதன்படி இனி எந்த வாகனத்தில் யாவது முன்பக்க கண்ணாடியில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் அவர்கள் கையில் வைத்திருந்ததோ அல்லது வேறு விதமாகவோ ஸ்கேன் செய்ய முயற்சி செய்தால், ஸ்கேன் செய்ய கூடாது எனவும் அவர்கள் ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாத பயணியாகவே கருத வேண்டும் எனவும், அவர்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை ஒரே வாகனத்திற்கு பல்வேறு விதமான ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி பயன்படுத்தி வந்தார்கள். இந்த முறை கேட்டை தடுப்பதற்காக ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு மட்டுமே வழங்க வேண்டும் என முடிவு செய்து ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி செய்ய உத்தரவிடப்பட்டது.
தற்போது இந்தியா முழுவதும் ஒரு வாகனத்திற்கு ஒரு பாஸ்ட் டேக் கார்டு தான் என்ற விதிமுறை அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு கார்களை பயன்படுத்தி வரும் நபர்கள் வேறு வேறு கார்களுக்கான ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வேறு காரில் பயன்படுத்தி முறைகேடு ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுப்பதற்காக தற்போது கட்டாயம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை முன்பக்க கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு போட்டுள்ளது.
ஃபாஸ்ட் டேக் கார்டுகள் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் தேவைப்படாமல் போகக்கூடிய சூழ்நிலை கூட உள்ளது. இந்தியா முழுவதும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சோதனைகளை செய்து வருகிறது. இது படிப்படியாக இந்தியா முழுவதும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல்முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அப்பொழுதுதான் சுங்கச்சாவடியில் உள்ள கார்டு ரீடர்கள் அதை எளிதாக ரீடு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் காரில் முன்பக்க கண்ணாடியில் ஃபாஸ்ட் டேக் கார்டு ஒட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








