பருத்தி மூட்டை இதுக்கு குடோன்லயே இருந்திருக்கலாம்! ஃபாஸ்டேக் கார்டு இல்லேன்னா இனி ஃபைன் கம்மி தான்!
இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சுங்கசாவடியை கடந்து செல்ல 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை யூபிஐ முறையில் செலுத்தினால் 25 சதவீதம் மட்டுமே அபராதமாக செலுத்தினால் போதும் என புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கட்டாயம் ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 98 சதவீதமான வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக் கார்டை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாமல் வாகனம் சுங்கசாவடியை கடக்க முயன்றால் கட்டணத்தில் இரண்டு மடங்கை செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு வைத்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் சிரமப்பட்டனர். இந்நிலையில் இதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லாமல் சுங்கசாவடியை கடப்பவர் ஃபாஸ்டேக் கட்டணத்த செலுத்தும் போது யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் வெறும் 25 சதவீதம் மட்டும் கூடுதலாக செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது.
உதாரணமாக ஒரு சுங்கசாவடியை கடக்க ஃபாஸ்டேக் கார்டு மூலம் ரூ100 வசூலிக்கப்பட்டால் இதுவரை அந்த சுங்கசாவடியை கடக்க ரூ200 ஃபாஸ்டேக் கார்டு இல்லாதவர்கள் செலுத்தி வந்தனர். ஆனால் இனி ஆன்லைன் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் வெறும் ரூ125 கட்டணமாக செலுத்தினால் போதும் என புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிமுறை வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது சுங்கசாவடிகளில் நேரடியாக பணபரித்தனையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அபராதம் தொகையா பணம் செலுத்துபவர்களும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும் என்ற காரணத்திற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது.
நேரடியாக பணம் வசூலிப்பதில் பகிர்வு குறித்து பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்துள்ளது. இதை சமாளிக்க முழுமையாக டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கவே இந்த நடைமுறையை கையாண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கசாவடியை ஏலம் எடுத்தவர்கள் மற்றும் அரசு இடையே பண பகிர்வு பிரச்சனை வெகுவாக குறையும்.
இந்தியாவில் தனிநபர் வாகனங்களுக்காக தற்போது வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் படி வெறும் ரூ3000 செலுத்தினால் போதும் வருடத்திற்கு 200 முறை சுங்கசாவடியை கடந்து செல்ல முடியும். இதனால் ஒரு முறைக்கு வெறும் ரூ15 தான் செலவாகும். இதனால் சுங்ககட்டண செலவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு பயண செலவு மிக வெகுவாக குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்ல சுங்கட்டணம் தற்போது ஃபாஸ்டேக் முறையில் வசூலிக்கப்படுகிறது. தனி நபர் வாகனங்களுக்காக ஃபாஸ்ட்டேக் கார்டுகளில் வருடாந்திர பாஸ் முறை அமுலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பணம் மிச்சப்படுத்த முடியும். ஆனால் ஃபாஸ்டேக் கார்டு அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்ததால் இந்த அபராத கட்டணத்தை நிரந்தரமாக குறைந்தாலோ நீக்கினாலோ இருக்கும் சிலருக்கும் வரும் பிரச்சனை ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications








