ஃபாஸ்ட்டேக் கார்டை வித்து ரூ8000 கோடி லாபம் பார்த்த மத்திய அரசு! அமைச்சரே சொல்லிட்டாரே!
இந்தியாவில் ஃபாஸ்டேக் கார்டு அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தது மூலம் கூடுதலாக ரூ8000 கோடி வருமானம் வந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகள் சுங்கசாவடிகளில் கணிசமான அளவு கூட்ட நெரிசலை குறைந்துள்ளதாக தெரவித்துள்ளார். இந்த ஃபாஸ்டேக் கார்டுகள் இந்தியாவில் எந்தளவிற்கு உதவியாக இருந்துள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியாக கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மேனுவல் முறையில் தான் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கார்டை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் கார்டில் ரீசார்ஜ் செய்து கடந்து சென்றால் நேரடியாக கார்டிலிருந்து பணம் கழிக்கப்பட்டுகிறது.

சுங்கசாவடிகளில் அதிக கூட்ட நெரிசலை குறைக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.இது நீண்ட நேரம் வாகனங்கள் சுங்கசாவடியி்ல காத்திருப்பது, தேவையில்லாத எரிபொருள் செலவு, அதிக மாசு, உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தது. தற்போது ஃபாஸ்ட்டேக் கார்டு வந்துவிட்டதால் சுங்கசாவடியில் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.
மத்திய அரசிடம் உள்ள தகவலை பொருத்தவரை சராசரியாக ஒர வாகனம் சுங்கசாவடியை கடக்க ஃபாஸ்ட் டேக் கார்டிற்கு முன்னர் 714 நொடிகளை எடுத்துக்கொண்டது. தற்போது இது 667 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு சிறிய மாற்றம் பால இருக்கலாம். ஆனால் ஒரு வாகனத்திற்கு சுமார் 47 நொடிகள் மிச்சமாகிறது. ஒரு நாளுக்கு லட்சகணக்கில் வாகனங்கள் சுங்கசாவடியை கடந்து செல்கிறது. அதை கணக்கீடு செய்து பார்த்தால் இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கிறது.

குறிப்பாக சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த ஃபாஸ்ட்டேக் கார் டு காரணமாக சிறப்பாக செயல்பட முடிகிறது. இது மட்டுமல்ல இந்த ஃபாஸ்டேக் கார்டுகள் வருமான உயர்வையும் கொண்டு வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ21,000 கோடி வருமானம் வந்துள்ளது. இது கடந்தாண்டு இதே முதல் காலாண்டை ஒப்பிடும் போது ரூ17,280 கோடியை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதில் 80 சதவீத வருமானம் தேசிய நெடுஞ்சாலை மூலம் கிடைக்கிறது.
தற்போது இந்தியாவில் இயங்கும் 98 சதவீதமான வாகனங்களில் ஃபாஸ்ட்டேக் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 8 கோடி ஆக்டிவ் அக்கவுண்ட்கள் உள்ளன. இந்த ஃபாஸ்ட்டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்ட பிறகு மக்கள் இதை அதை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்போது இதை ரீசார்ஜ் செய்வதும் எளிமையானதாக இருக்கிறது.
இந்தியாவில் சுங்கசாவடிகளில் இன்னும் பல இடங்களில் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் வருமானம் குறைவதாகவும்,இதை சரி செய்தால் கூடுதலாக ரூ10,000 கோடி வசூலாகும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவத்துள்ளார். மேலும் இந்த சுங்கசாவடிகள் சுற்றுசூழலில் ஏற்படும் மாசுவை வெகுவாக குறைப்பதாகவும் இதனால் சுங்கசாவடிகளை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு குறைந்துள்ளதாகவும், ஒலி மாசும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாஸ்டேக் கார்டுகள் சுங்கசாவடியில் காத்திருப்பு நேரத்தை குறைக்க கொண்டு வரப்பட்டது என்றாலும் இது பெரிய அளவில் பலன் தரவில்லை. இதனால் தான் தானியங்கியாக வாகனம் நிற்காமல் சென்றாலும் சுங்கசாவடியில் பணம் வசூல் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இது தற்போது முயற்சியாக மட்டுமே இருக்கிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பயன்பாட்டிற்கு வரும்.


Click it and Unblock the Notifications








