இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

பாஸ்ட்டேக்கில் மறைந்திருக்கும் ஒரு நல்ல விஷயத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல், பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்துடன் தனியார் கார், டூவீலர் ஆகிய வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

மேலும் தனியார் வாகனங்களை இயக்குவதற்கும், பயணங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஊரடங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்திய சாலைகள் தற்போது திரும்பி வருகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கூடவே கொரோனா பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

ஆனால் நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து கொள்ள முடியும். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பாஸ்ட்டேக் தொழில்நுட்பம் உதவி செய்கிறது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI - National Highways Authority of India ) தற்போது தெரிவித்துள்ளது.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

ஆர்எஃப்ஐடி (RFID - Radio Frequency Identification) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாஸ்ட்டேக் இயங்குகிறது. நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் நபராக இருந்தால், டோல்கேட்டில் ரொக்கமாக கட்டணம் செலுத்த தேவையில்லை. உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்ட்டேக் கார்டை, டோல்கேட்டில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து உங்கள் வருகையை பதிவு செய்யும்.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இதன்மூலம் நீங்கள் ஏற்கனவே இணைத்து வைத்திருக்கும் கணக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்பட்டு விடும். அதாவது மனித தொடர்பே இல்லாமல் நீங்கள் கட்டணம் செலுத்தி விட்டு டோல்கேட்டை கடந்து செல்வதற்கு பாஸ்ட்டேக் உதவுகிறது. நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தாவிட்டால், கட்டணம் செலுத்துவதற்கு டோல்கேட் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். இதனால்தான் பயணிகளுடைய பாதுகாப்பை பாஸ்ட்டேக் உறுதி செய்வதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டத்திற்கு பிறகான வாழ்க்கைக்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் நாட்களில் சரக்கு மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்னறிவிக்கிறது.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். இதுபோன்ற சூழலில், டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்ட்டேக் வழியை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணங்களை செலுத்துவதற்கு இதுவே பாதுகாப்பான வழி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ள கருத்து உண்மையும் கூட. பாஸ்ட்டேக்கை ஒரு வரப்பிரசாதம் என இந்த சமயத்தில் சொல்வதில் தவறில்லை. இதுதவிர டோல்கேட் கட்டணம் செலுத்த காத்திருக்கும் நேரம் மிச்சம், எரிபொருள் மிச்சம் என பாஸ்ட்டேக்கால் இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
FAStag Technology Is Helping Commuters To Maintain Social Distancing In Toll Plazas. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X