ஏப்ரல் 1 முதல் டோல்கேட்களில் வருகிறது புதிய ரூல்ஸ்! இனி இது இல்லேன்னா கிராஸ் பண்ணவே முடியாது!
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம், டோல் கேட் கட்டண முறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது. 2025 ஏப்ரல் 1 முதல், மும்பையில் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களும் Fastag முறையை மட்டுமே பயன்படுத்தும் என அறிவித்துள்ளது. டோல்கேட் கட்டணங்களை எளிமைப்படுத்தி, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம். இனி மும்பையில் உள்ள டோல்கேட்களில் பணம் பெறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Fastag இல்லாத வாகனங்கள் இரட்டிப்பு டோல்கேட் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை பணம், கிரெடிட்/டெபிட் கார்டுகள் அல்லது UPI மூலம் செலுத்தலாம். இருப்பினும், மும்பைக்குள் குறிப்பிட்ட என்ட்ரி பாயிண்ட் பகுதியில் பள்ளி பேருந்துகள், லைட் மோட்டார் வாகனங்கள் மற்றும் மாநில போக்குவரத்து பேருந்துகள் போன்ற சில வாகனங்கள் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த விலக்கு மும்பையின் முக்கிய ஐந்து டோல் பிளாசாக்களுக்கு பொருந்தும் : முலுண்ட் வெஸ்ட், முலுண்ட் ஈஸ்ட், ஐரோலி, தஹிசர் மற்றும் வாஷி ஆகிய டோல்கேட்களுக்கு மட்டும்இந்த விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்குகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் மும்பை-நாக்பூர் சமருத்தி எக்ஸ்பிரஸ்வே போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் Fastag முறை கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fastag வாங்குவது எளிது. Paytm, Amazon அல்லது எந்தவொரு வங்கி பயன்பாடு ஆப் அல்லது வலைத்தளம் மூலமும் இது கிடைக்கிறது. ஒருமுறை வாங்கிய பிறகு, PhonePe, Google Pay அல்லது Amazon Pay போன்ற பணம் செலுத்தும் ஆப் மூலம் உங்கள் Fastag ஐ ரீசார்ஜ் செய்வதுகொள்ள முடியும். அதுவும் எளிதாக ரீசார்ஜ் செய்ய முடியும்..

எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் Fastag பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் பயணிப்பதற்கு முன் அதை ரீசார்ஜ் செய்வது மிகவும் முக்கியம். ரீசார்ஜ் செய்த பிறகும், நிலை புதுப்பிப்புகளில் தாமதம் ஏற்படலாம். உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படாவிட்டால், போதுமான இருப்பு இருந்தபோதிலும் நீங்கள் இரட்டிப்பு டோல்கேட் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த புதிய முறை டோல் பிளாஸாக்களில் பரிவர்த்தனைகளை கணிசமாக விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்பு நேரத்தை குறைத்து திறமையான டோல் கட்டண வசூலை உறுதிப்படுத்துவதன் மூலம் பயணத்தை மேலும் சுலபமாக மாற்ற இந்த அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது. இதனால் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.
இந்த டிஜிட்டல் அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அதிகாரிகள் மும்பையின் சாலைகளில் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தவும், திறமையான போக்குவரத்து மேலாண்மையை பராமரிக்கவும் முடியும் என நம்புகிறார்கள். தற்போது இது மும்பை பகுதியில் மட்டும் அமலுக்கு வந்தாலும் விரைவாக ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயம் என்ற விதிமுறை படிப்படியாக இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோல்கேட்களில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது நீண்ட கால பிரச்சனையாக இருக்கிறது. ஃபாஸ்ட்டேக் கார்கள் வந்த பிறகும் இந்த பிரச்சனை பெரிய அளவில் தீரவில்லை. இதன் காரணமாக பிரச்சனைகளை கண்டறித்து இதற்கு தீர்வு செய்வது நல்ல விஷயம் தான் ஆனால் முற்றிலுமாக தொழிற்நுட்பத்தை சார்ந்திருப்பது சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








