ரூ1100 செலவான இடத்துல வெறும் ரூ210 தான் செலவாகும்! ஃபாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ் எடுத்தால் இவ்வளவு பணம் மிச்சமா?
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கார், வேன், ஜீப் போன்ற தனிநபர் வாகனங்களுக்கான வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வருகிறது. இந்த பாஸை பயன்படுத்தி நாம் பயணிக்கும் போது தற்போது நாம் செலுத்தும் கட்டணத்தில் இருந்து எவ்வளவு பணத்தை மிச்சம் செய்ய முடியும்? இது நமக்கு லாபமா? நஷ்டமா? இதை எப்படி கணக்கிடுவது என பலர் குழம்பி போய் உள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
தற்போது வருடாந்திர பாஸ் ரூ3000 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதற்கு 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். அப்படி என்றால் ஒரு சுங்க சாவடிக்கு ரூ15 தான் கட்டணமாக செலவாகிறது. அப்படி பார்த்தால் ஒரு பயணத்தில் நாம் தற்போது எவ்வளவு கட்டணம் செலு்த்துகிறோம். என்பதையும்,பாஸ் வந்த பிறகு அதே வழியில் பயணித்தால் இந்த ரூ3000த்தை 200 டிரிப்பாக பிரித்தால் ஒரு டிரிப்க்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணிப்பவர்கள் தற்போது எவ்வளவு சுங்கசாவடி கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த பாஸ் வந்த பிறகு அவர்களுக்கு அதில் ஆகும் செலவு எவ்வளவு என்பதை தான் இங்கே ஒப்பிடப்போகிறோம். அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணிப்பதற்கான சுங்கசாவடி கட்டண ஒப்பீட்டை காணலாம்.
தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பயணிக்க வேண்டும் என்றால் மொத்தம் 14 சுங்கசாவடிகளை கடந்து வர வேண்டும். இதில் இதற்கு தற்போது தற்போது ரூ 1,110 சுங்க கட்டணம் செலவாகிறது. இதுவே பாஸ் வந்த பிறகு வெறும் ரூ210 தான் செலவாகும்.

அடுத்தாக நெல்லையிலிருந்து சென்னைக்கு வர தற்போது 11 சுங்கசாவடிகளை கடந்து வர வேண்டும் இதற்கு சுமார் ரூ1000 சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும். வருடாந்திர பாஸ் வந்த பிறகு ரூ165 தான் செலவாகும். அதே போல மதுரையிலிருந்து சென்னை வர 8 சுங்கசாவடிகளை கடந்து வர வேண்டும். இதற்கு ரூ725 சுங்க கட்டணம் வருகிறது. பாஸ் வந்த பிறகு வெறும் ரூ120 தான் செலவாகும்.
| சென்னை டூ தமிழகத்தின் முக்கிய நகரங்கள் | சுங்கசாவடிகளின் எண்ணிக்கை | தற்போதைய கட்டணம் | வருடாந்திர பாஸ் எடுத்தால் செலவு |
| கன்னியாகுமரி | 14 | 1,110 | 210 |
| நெல்லை | 11 | 1,000 | 165 |
| மதுரை | 8 | 725 | 120 |
| திருச்சி | 6 | 430 | 90 |
| கோவை | 11 | 782 | 165 |
| சேலம் | 7 | 505 | 105 |
அடுத்தாக திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்க 6 சுங்கசாவடிகளை கடந்து செல்ல வேண்டும் அதற்கு தற்போது ரூ430 கட்டணம் வருகிறது. இதுவே பாஸ் வந்துவிட்டால் வெறும் ரூ90 தான் செலவாகும். கோவையில் இருந்து சென்னைக்கு செல்ல 11 சுங்கசாவடிகள் இருக்கிறது. இதில் தற்போது ரூ782 செலவாகிறது. இதுவே பாஸ் வந்துவிட்டால் ரூ165 தான் செலவாகும்.

சேலத்திலிருந்து சென்னைக்கு பயணிக்க தற்போது 7 சுங்கசாவடிகளை கடக்க வேண்டும் அதற்கு தற்போது ரூ505 கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவே பாஸ் வந்துவிட்டால் வெறும் ரூ105 தான் செலவாகும். இதனால் சுங்கசாவடி கட்டணம் பல மடங்கு குறைகிறது. பலர் இதன் மூலம் பயன்பெறப்போகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் அதிகமான சுங்கசாவடிகள் இருப்பதால் மக்கள் பலர் சுங்கசாவடிகளுக்கு அதிகமாக செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கார் வைத்திருக்கும் பலர் இந்த பாஸ் எடுப்பதன் மூலம் குறைவான செலவில் சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். இது நிச்சயம் அவர்களுக்கு பலனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









