ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஹெலிகாப்டர்களின் வேகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஹெலிகாப்டர்கள் தங்களின் வேகத்திற்காக அறியப்படுவதில்லை என்றாலும், நம்மில் பலரும் நினைப்பதை விட அதிக வேகத்தில் அவற்றால் பறக்க முடியும். நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தால், அதன் வேகம் நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். குறிப்பாக கார் அல்லது ரயிலுடன் ஒப்பிடும்போது, ஹெலிகாப்டரின் வேகம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஆனால் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு சில பொதுவான சிவில் ஹெலிகாப்டர்களின் சராசரி வேகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஹெலிகாப்டர்களால் எவ்வளவு வேகத்தில் பறக்க முடியும்?

பொதுவாக ஹெலிகாப்டர்களின் சராசரி வேகம் 140 நாட்ஸ் (140 knots) என கணக்கிடப்படுகிறது. அதாவது மணிக்கு 160 மைல்கள் அல்லது மணிக்கு 260 கிலோ மீட்டர்கள். ஆனால் ஹெலிகாப்டரின் அளவு என்ன? எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள்? அல்லது எவ்வளவு எடை கொண்ட பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது? என்பதை பொறுத்து ஹெலிகாப்டர்களின் சராசரி வேகம் மாறுபடும்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

மிகவும் வேகமான சிவில் ஹெலிகாப்டர்கள்!

வெவ்வேறு அளவுகளை உடைய, அதே சமயம் மிகவும் வேகமாகவும் பறக்க கூடிய ஒரு சில ஹெலிகாப்டர்கள் பற்றிய தகவல்களையும், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் அவற்றால் எவ்வளவு தூரம் (ரேஞ்ச்) இடைவிடாமல் பறக்க முடியும் என்பதையும் தொடர்ந்து பார்க்கலாம்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

அகுஸ்டா 109 (Agusta 109): அகுஸ்டா 109 ஹெலிகாப்டரால், மணிக்கு 180 மைல்கள் வேகம் வரை பறக்க முடியும். அத்துடன் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்களை இந்த ஹெலிகாப்டர் கடக்கும். 5 பயணிகள் சௌகரியமாக பயணம் செய்யலாம்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஏர்பஸ் ஏஎஸ்350 (Airbus AS350): இந்த ஹெலிகாப்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 மைல்கள். ஆறு பயணிகளுடன் 400 மைல்கள் வரை பயணிக்கும் திறன் இதற்கு உண்டு. விஐபிக்களின் பயணங்களுக்காக ஏர்பஎஸ் ஏஎஸ்350 அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மருத்துவ ரீதியிலான அவசர பயன்பாடுகளுக்கும் ஏர்பஸ் ஏஎஸ்350 அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ஏர்பஸ் ஏஎஸ்355 (Airbus AS355): 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகபட்சமாக மணிக்கு 150 மைல்கள் என்ற வேகத்தில், 400 மைல்கள் வரை ஏர்பஸ் ஏஎஸ்355 ஹெலிகாப்டரால் பறக்க முடியும். வானில் இருந்து புகைப்படம் எடுப்பது, இடங்களை பார்வையிடுவது போன்ற பணிகளுக்கு ஏற்ற ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

ராபின்சன் ஆர்44 (Robinson R44): இது ஒரு சிறிய ஹெலிகாப்டர் ஆகும். இதில், பயணிகளுக்காக மூன்று இருக்கைகள் மட்டும்தான் இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 130 மைல்கள் என்ற வேகத்தில், இந்த ஹெலிகாப்டரால் 400 மைல்கள் தொலைவை கடக்க முடியும்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

சிகோர்ஸ்கி எஸ்76 (Sikorsky S76): இது சற்று பெரிய ஹெலிகாப்டர். சிகோர்ஸ்கி எஸ்76 ஹெலிகாப்டர், 8 இருக்கைகளை கொண்டிருக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 மைல்கள். ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 400 மைல்களை கடக்கும்.

ரொம்ப ஸ்லோ அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க... ஹெலிகாப்டர்கள் எவ்வளவு வேகத்தில் பறக்கும் தெரியுமா?

சிகோர்ஸ்கி எஸ்92 (Sikorsky S92): இந்த ஹெலிகாப்டரில் 16 பேர் வரை பயணம் செய்ய முடியும். எனவே மிகப்பெரிய ஹெலிகாப்டர்களில் ஒன்றாக இது திகழ்கிறது. 26 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட பொருட்கள் உடன், அதிகபட்சமாக மணிக்கு 160 மைல்கள் என்ற வேகத்தில், 600 மைல்களுக்கும் மேலான தொலைவை கடக்கும் திறனை சிகோர்ஸ்கி எஸ்92 பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fastest Civil Helicopters - Interesting Facts. Read in Tamil
Story first published: Saturday, September 12, 2020, 19:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X