சென்னை - மதுரை வெறும் 1 மணி நேரத்துல போற மாதிரி ரயில் எல்லாம் இருக்குது! எங்க தெரியுமா?

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் மிக வேகமாக பயணிக்கும் ரயில்களாக இருக்கும் நிலையில் உலக அளவில் வந்தே பாரத் ரயிலை விட அதிக வேகத்தில் பயணிக்கும் ரயில்கள் எல்லாம் பயன்பாட்டில் உள்ளன. வந்தே பாரத் ரயிலின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகம் உள்ள ரயில்கள் எல்லாம் தற்போது வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரயில்களை பற்றிய விரிவான விவரங்களை தான் இங்கே காண போகிறோம்.

ஷாங்காய் மேகலேவ் - சீனா: ஷாங்காய் மேகலேவ் ரயில்கள் சுமார் 460 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. இதுவரை அதிகபட்சமாக 501 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது. இதுதான் உலகிலேயே வேகமான ரயிலாக இருக்கிறது. இந்த வேகத்திற்கு காரணம் இந்த ரயில் பயணிக்கும் போது ரயிலின் வீல்கள் டிராக்கில் இருந்து சற்று மேலே தூக்கி விடும்.

fastest trains in world

எலக்ட்ரோ மேக்னடிக் சிஸ்டம் மூலம் ரயில் குறைவான உராய்வுகளில் பயணிக்கும் இந்த ரயிலை சைமன்ஸ் மற்றும் டைசன் குரூப் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரயில் கடந்த 2004-ம் ஆண்டு பயன்பட்டிற்கு வந்தது. இந்த ரயில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கிறது. வெறும் 8 நிமிடத்தில் தனது பயணத்தை மேற்கொள்கிறது.

சி ஆர் ஃபக்சிங்-சீனா: சீன அரசால் நடத்தப்படும் ரயில் இது. இந்த ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இந்த ரயிலை முழுவதுமாக சீன ரயில்வே கார்ப்பரேஷன் சொந்தமாக தயாரித்துள்ளது. இந்த ரயிலில் 500 பயணிகள் வரை பயணிக்க முடியும். சுமார் 29 மீட்டர் நீளம் கொண்டது, 3.36 மீட்டர் அகலம் கொண்டது.

fastest trains in world

4.06 மீட்டர் உயரம் கொண்டது. பிஜிங் முதல் ஷாங்காய் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரு நகரங்களையும் வெறும்5 மணி நேரத்தில் இணைக்கும் வகையில் இந்த ரயில் இயங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற ஏழு ரூட்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

டிபி ஐஸ்-ஜெர்மனி: இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 3 என்பதுதான் ஐஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் ரயிலாக இருக்கிற.து இந்த ரயிலை சைமன்சன் மற்றும் பாம்பேடியர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இது எலெக்ட்ரிக் ரயிலாகும் இந்த ரயில் அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த ரயில்கள் ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், லண்டன், நெதர்லாந்து, ஸ்பெயின், சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளில் வேறுவேறு பெயர்களில் இயங்கி வருகிறது.

fastest trains in world

எஸ்ஜிஎன்ஜிஎஃப் டிஜிவி - பிரான்ஸ்: இந்த ரயில் ஆல்ஸ்டோம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த ரயில் இயங்கி வருகிறது. பிரான்ஸ் நாட்டை இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், லக்கம்பூர், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைக்க இந்த ரயில் பயன்படுகிறது.

இதுபோக அமெரிக்கா, ஸ்பெயின் இத்தாலி, மொராக்கோ, சீனா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஆகிய நாடுகளிலும் வேறு வேறு பெயர்களில் வேறு வேறு மாற்றங்களுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது. அதிகபட்சமாக 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

fastest trains in world

ஜே ஆர் சிலிக்கான்சன்-ஜப்பான்: இந்த ரயிலை தான் சர்வதேச அளவில் புல்லட் ரயில் என அழைக்கிறார்கள். ஜப்பான் நாடு தனக்கென ஒரு ரயில்வே நெட்வொர்க்கை கட்டமைக்கும் போது அதிவேக ரயில்களை உருவாக்கியது. டோக்கியோவில் இருந்து நீண்ட தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைப்பதற்காக இந்த ரயில் உருவாக்கப்பட்டது. சுமார் 515 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1964 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.

இந்த பாதை தற்போது 3000 கிலோமீட்டர் தூரத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை ரயில் 220 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. தற்போது அந்த ரயில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு ஹிட்டாச்சி ரயில் கவாசகி இண்டஸ்ட்ரிஸ் ஆகிய நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் எல்லாம் உட்பகுத்தப்பட்டு தற்போது இந்த ரயில் 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

fastest trains in world

இந்தியாவில் உள்ள வந்தே பாரத் ரயில் என்பது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயிலாகும். சென்னை ஐசிஎஃப் ஆலையில் தான் இந்த ரயில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் தயாரிக்கப்படும் போது 18 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டதால் டிரெயின் 18 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த ரயில் வெளிநாட்டுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது இந்த ரயில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இந்தியாவிலேயே செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு செமி ஹை ஸ்பீடு ரயிலாக இருக்கிறது. இந்த ரயில் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முதல் முறையாக தயாரிக்கப்படும் போது 200 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்ட ரயிலாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் பல அதிவேக ரயில்கள் பயன்பாட்டில் இருந்தாலும் இந்தியாவில் இதுபோன்ற ரயில்கள் பயன்பாட்டில் இல்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் உள்ள ரயில் பயணிகளின் எண்ணிக்கை தான். இந்தியாவில் அதிவேக ரயில்களை தயாரிக்க வேண்டும் என்றால் இந்திய மக்கள் தொகையை கணக்கில் வைத்து அதிக எண்ணிக்கையில் தயாரிக்க வேண்டும். இதற்கான பொருள் செலவு அதிகமாக ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 11:34 [IST]
English summary
Fastest trains in world double speed of vande bharat
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X