ஒரு நிமிஷம் நெஞ்சே நின்னு போயிருச்சு... மனச இரும்பா மாத்திகிட்டு இந்த வீடியோவை பாருங்க...

வாகனங்களை இயக்கும்போது கவனம் முழுவதும் சாலையில் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக நிறைய வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விடுகிறது. இதன் காரணமாக ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) அரங்கேறி வருவதை நாம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டுள்ளோம்.

இந்த வரிசையில் கவன சிதறல் காரணமாக தற்போது பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. நிஸான் மைக்ரா (Nissan Micra) கார் டிரைவரின் கவனம் சிதறியதால், இந்த சாலை விபத்து அரங்கேறியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தையும், அவரது மகனும் இந்த சாலை விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

Accident

இந்த சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video) தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நிஸான் மைக்ரா கார் ஒன்று வேகமாக வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது சாலையில் ஒருவர் தனது மகனை தோளில் சுமந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த தந்தை மற்றும் மகனை நெருங்கிய நிலையில், அவர்களுக்கு முன்னால் இருந்த ஒரு மின்சார கம்பத்தில், நிஸான் மைக்ரா கார் எதிர்பாராத விதமாக மோதியது. அந்த மின்சார கம்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தந்தை மற்றும் மகன் மீது நிஸான் மைக்ரா கார் மோதியிருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

Father And Son Miraculously Escaped From Accident

தந்தையும், அவரது மகனும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பதை பதைக்க வைக்கும் இந்த காட்சிகளை தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு சில சாலை விபத்துக்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு பிறகுதான், தந்தையும், மகனும் உயிர் தப்பிய காட்சிகள் வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கேரளா (Kerala) மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் நிஸான் மைக்ரா காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. அத்துடன் முன் பக்க ஏர்பேக் விரிவடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காரின் டிரைவருக்கு என்ன ஆனது? என்பது உறுதியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனம் ஓட்டும்போது ஒருவர் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை இந்த விபத்து தெளிவாக உணர்த்துகிறது. நிஸான் மைக்ரா காரின் டிரைவர் வேகமாகதான் வந்தார். ஆனால் அது அதிவேகம் போல் தெரியவில்லை. இருப்பினும் அவரது கவனம் சிதறியதே இந்த விபத்திற்கு காரணமாக தெரிகிறது.

எனவே எந்தவொரு வாகனம் என்றாலும், டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், கவனத்தை சிதற விடாதீர்கள். குறிப்பாக மது போதையிலோ அல்லது செல்போனில் பேசி கொண்டோ வாகனம் ஓட்ட வேண்டாம். முடிந்த அளவிற்கு மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதையும் மீறி மது அருந்தி விட்டால், மது அருந்தாத ஒருவரை வாகனம் ஓட்ட சொல்லுங்கள்.

இல்லாவிட்டால் கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் மூலம் பயணம் செய்யலாம். அதேபோல் வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போன் அழைப்புகள் வந்தால், ஒரு ஓரமாக நின்று பேசுங்கள். வாகனம் ஓட்டி கொண்டே செல்போனில் பேசுவது கவன சிதறலை ஏற்படுத்தும் என்பதை எந்தவொரு சூழலிலும் மறந்து விட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 13:48 [IST]
English summary
Father and son miraculously escaped from accident viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+