ஒரு கார் வாங்கவே இங்க நாக்கு தள்ளுது... குடும்பத்துடன் ஷோரூமில் தந்தை- மகன் செய்த காரியம்!!
வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்குவது போல கார் வாங்குவதும் எவரொருவருக்கும் பெரிய விஷயமாகும். அதேபோல், கார் வாங்கும்போது கிடைக்கக்கூடிய சந்தோஷமும் எண்ணில் அடங்காதது. அப்படியிருக்கையில், இங்கு ஒரு தந்தை மற்றும் மகன் என இருவர் ஒரே நேரத்தில் இரு டொயோட்டா கார்களை டெலிவிரி பெற்று அசத்தியுள்ளனர். இருவரும் சொல்லி வைத்தது போன்று வெள்ளை நிறத்தில் டொயோட்டா கார்களை டெலிவிரி பெற்றுள்ளனர். யார் இவர்கள் என்பதையும், இவர்கள் வாங்கியுள்ள டொயோட்டா கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டொயோட்டா நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பிரபலமான கார்களுள் ஃபார்ச்சூனர் மிக முக்கியமானது ஆகும். அதேபோல், சமீப காலத்தில் சுஸுகி கார்களில் இருந்து உருவாக்கப்பட்ட டொயோட்டா கார்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அவ்வாறு சமீப காலத்தில் டொயோட்டா அறிமுகம் செய்த தரமான கார்களுள் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும். டொயோட்டாவின் ஹைப்ரீட் காராக ஹைரைடர் விளங்குகிறது. இந்த இரு டொயோட்டா கார்களை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகும் தந்தை- மகன் வாங்கியுள்ளனர். பெங்களூரில் உள்ள ரவிந்து டொயோட்டா ஷோரூம் ஒன்றில் ஒரே நாளில் இவர்கள் தங்களது கார்களை டெலிவிரி பெற்றுள்ளனர்.
கார்களை டெலிவிரி பெறுவதற்கு இவர்கள் தங்களது குடும்பத்துடன் இரு டொயோட்டா இன்னோவா மற்றும் ஒரு டொயோட்டா கிளான்ஸா கார்களில் ஷோரூமுக்கு சென்றுள்ளனர். அதாவது, இந்த குடும்பத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதும் டொயோட்டா கார்கள் ஆகும். இந்த குடும்ப தலைவரும், புதியதாக ஃபார்ச்சூனர் காரை வாங்கியிருப்பவரின் பெயர் திரு.ரவிந்திரா கவுடா ஆகும்.

ஷோரூமில் மற்ற இதர ஆவண சமர்பிப்பு வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின் கஸ்டமர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் டெலிவிரிக்காக காத்திருப்பதில் இருந்து வீடியோ துவங்குகிறது. அதன்பின், இருவரும் வெள்ளை நிறத்தில் தங்களது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹைரைடர் கார்களை மகிழ்ச்சி உடன் டெலிவிரி பெறும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
காரை டெலிவிரி பெற்ற பின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை மற்றவர்களுடன் ரவீந்திரா கவுடாவின் குடும்பம் இனிப்புகளுடன் பகிர்ந்து கொண்டாடினர். 2.8 லிட்டர் டீசல் என்ஜின் உடன் ரவீந்திரா கவுடா தனது ஃபார்ச்சூனர் காரை வாங்கியுள்ளார். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இது இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் பிரபலமான டொயோட்டா கார்களுள் ஒன்றாகும்.

ஹிலக்ஸ் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் ஃபார்ச்சூனர் காரில் டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமின்றி, பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. கவுடாவின் மகன் வாங்கியிருப்பது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்கிற 5-சீட்டர் எஸ்யூவி கார் ஆகும். மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹைரைடர் கார் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்பன அந்த 3 என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டொயோட்டா நிறுவனம் விரைவில் ஃபார்ச்சூனர் காரிலும் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில் டீசல் என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி கார்கள் அளவிற்கு இலட்சக்கணக்கில் விற்பனையாகா விடினும், இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு என்று ஒரு தனி கிரேஸ் உள்ளது. இதற்கு சரியான சாட்சி தான் இந்த தந்தை- மகன் ஒரே நாளில் தங்களது டொயோட்டா கார்களை டெலிவிரி பெற்றிருப்பதாகும். அதிலிலும் ஒரே மாதிரியாக இவர்கள் வெள்ளை நிறத்தில் கார்களை பெற்றிருப்பது பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications









