மேஜிக் பண்ணிட்டாரு மனுஷன்.. மகளின் ஆசையை நிறைவேற்ற தந்தை செய்த செயல்.. வாயடைத்து நின்ற காவலர்கள்!

இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் பைக் மாடலாக ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக் இருக்கின்றது. இந்த பைக்கையே மாயஜாலம் செய்ததுபோல மிகவும் குட்டியானதாக மாற்றி இருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த ஓர் நபர். இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளைஞர் ஒருவர் மாயாஜாலம் செய்ததைப் போல புல்லட் பைக்கை மிகவும் குட்டியானதாக மாற்றி இருக்கின்றார். இதை அவர் என்ன மந்திரத்தை சொல்லி இப்படி மாற்றி இருப்பார் என்பதே பலரின் சந்தேகமாக இருக்கின்றது. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த பைக் மாயாஜாலம் செய்து குட்டியாக மாற்றப்பட்ட வாகனம் அல்ல.

Mini bullet bike

அது அந்த இளைஞரால் தயார் செய்யப்பட்ட புல்லட் ரக குட்டி மோட்டார்சைக்கிள் ஆகும். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று குட்டி பைக்குகள் உருவாக்கப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று குட்டியான தோற்றத்தில் பைக்குகள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

மற்றவற்றைப் போலவே இதுவும் கொஞ்சம் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த மினி புல்லட்டை தயாரித்தவர் தன்னுடைய மகளின் ஆசையை தீர்த்து வைப்பதற்காகவே ரெடி பண்ணியதாக தெரிவித்து இருக்கின்றார். இதுபலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அதுமட்டுமில்லைங்க, இந்த மினி புல்லட் மோட்டார்சைக்கிள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது போக்குவரத்து போலீஸாரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றது.

Mini bike full view

இதையும், தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ காட்சிகள் நமக்கு காண்பிக்கின்றன. குறிப்பாக, அந்த மினி புல்லட் தயாரிக்கப்பட்ட விதமே பலரின் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. அதாவது, துள்ளியமான பழைய புல்லட் பைக்கிற்கான தோற்றத்தை இந்த மினி பைக்கிற்கு அவர் கொடுத்திருக்கின்றார்.

இந்த வாகனத்தை அவர் சொந்த கராஜிலேயே ரெடி செய்திருக்கின்றார். பெரிய அளவில் வசதிகள் இல்லாத போதும், அந்த வாகனத்தை அவர் துள்ளியமாக தயார் செய்திருக்கின்றார். எஞ்சினுக்காக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று, வாகனத்தை கலப்பினம் செய்வது என்பது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றச் செயல் ஆகும்.

இதுவே, அவர் இந்த மோட்டார்சைக்கிளில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் எலெக்ட்ரிக் அல்லது வேறு ஏதேனும் மோட்டாரை பயன்படுத்தி இருந்தால் அதை வெளி உலகில் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இருந்திருக்காது. மேலும், ஆக்டிவா ஸ்கூட்டரில் இருத்து எஞ்ஜின் பிரித்தெடுத்து பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த வாகனத்தை அவர் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கின்றது.

ஆனால், இந்த மினி புல்லட்டில் செய்ததாக தெரியவில்லை. தலைநகர் டெல்லியைச் சேர்ந்த இளைஞரே இந்த அளவிற்கு கை பக்குவத்தோடு இந்த மினி புல்லட்டை தயார் செய்திருக்கின்றார். அதேவேளையில், பிற கூறுகளுக்காக மற்ற இருசக்கர வாகனங்களின் ஸ்கிராப் ஐட்டங்களையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

குறிப்பாக, சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வேறு இருசக்கர வாகனங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மகளுக்கு பிடித்த வண்ணமான பிங்க நிறத்தையும் அந்த பைக்கிற்கு அவர் சேர்த்திருக்கின்றார். ஆகையால், இந்த மினி புல்லட் பலமடங்கு அழகான வாகனமாக மாறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, வாகனங்களை கலப்பினம் செய்வது மிகப் பெரிய குற்றச் செயலாகும். இதுமாதிரியான வாகனங்களை சோதனைக்காக பலர் தயார் செய்துக் கொண்டிருக்கின்றனர். இது வரவேற்கப்பட்டாலும், ஆனால், சாலை பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், ஒரு சிலர் இத்தகைய வாகனங்களை பொதுவெளியிலேயே சோதனை ஓட்டம் செய்கின்றனர். அதுமாதிரியானோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 5:00 [IST]
English summary
Father build mini bullet for his daughter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+