கன்னத்துல முத்தம் கொடுத்து 4.5 கோடி ரூபாய் விலையுள்ள காரை பரிசாக தந்த பணக்காரர்.. இந்த காரையா கொடுத்திருக்காரு
ஆசைப்படுவது எல்லாம் உடனுக்கு உடன் கிடைத்துவிடும். இந்த மாதிரியான ஓர் குடும்பத்தில் பிறப்பது எல்லாம் ஒரு வரம்னே சொல்லலாம். அப்படியான ஓர் குடும்பத்தில் பிறந்த இளைஞரே வர்தன் (சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்). இவரின் மிகப் பெரிய ஆசையான லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) கார் கனவே தற்போது அவரின் தந்தை வாயிலாக நிறைவேறியிருக்கின்றது. ஆமாங்க, இந்த விலை உயர்ந்த சூப்பர் காரை அவருடைய அப்பா பரிசாக வழங்கி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
தந்தை, மகன் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்று கூடி, ஷோரூமுக்கே வந்து காரை டெலிவரி பெற்றுச் சென்றிருக்கின்றனர். குறிப்பாக, கன்னத்தில் முத்தம் கொடுத்து காரை பரிசாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவே இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று அப்பா மகனுக்கு காரை பரிசளிப்பது மற்றும் மகன் அப்பாவுக்கு காரை பரிசளிக்கும் நிகழ்வு அரங்கேறுவது முதல் முறையல்ல.

இதற்கு முன்பாகவும் இந்த மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் நிறைய அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இந்த பரிசளிப்பு நிகழ்வு கொஞ்சம் ஸ்பெஷல் ஆகும். ஏனென்றால், பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் அந்த கார் அவ்வளவு அதிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. விலையாக இருக்கட்டும், அதன் திறன் வெளிப்பாடாக இருக்கட்டும் அனைத்தும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றன.
பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 4.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே மகன் ஆசைப்பட்டுவிட்டான் என்பதற்காக தந்தை பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கின்றார். ஆகையால், 2024 ஆம் ஆண்டு அந்த இளைஞருக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியிருக்கின்றது.
சொல்லப்போனால் அந்த நபருக்கு 2024 டிசம்பர் பொக்கிஷம் போன்றதாக மாறியிருக்கின்றது. அவ்வளவு சூப்பரான கார் மாடலே லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா ஆகும். 21 அங்குல அலாய் வீல், ப்ளூ ஆஸ்ட்ரியஸ் எனும் பிரத்யேக நிறத்தால் அந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை இந்தியாவில் சொற்ப அளவிலான பணக்காரர்களே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு காரின் அதிக விலையை மட்டுமே காரணமாக கூறிவிட முடியாது. அதன், அதீத திறன் வெளிப்பாடும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. ஆமாங்க, நம்ப முடியாத அளவிற்கு அதீத ஆற்றலை உருவாக்கக் கூடிய ஓர் கார் மாடலே இதுவாகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ ஆகும்.
மேலும், இந்த காரால் வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய மின்னல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட காராகவே ஹூராகேன் டெக்னிகா காட்சியளிக்கின்றது. இந்த காரின் இத்தகைய அதீத ஆற்றலுக்காக 5.2 லிட்டர் வி10 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 640 பிஎச்பி மற்றும் 565 என்எம் டார்க்கை உருவாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காரை சமீபத்திலேயே ஓர் புகழ்பெற்ற இந்தி பட நடிகை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் வேறு யாருமல்ல ஸ்ரதா கபூரே அவர் ஆவார். கடந்த அக்டோபர் மாதத்திலேயே அவர் இந்த காரை வாங்கினார். ஏற்கனவே விலை உயர்ந்த கார் மாடல்கள் பல அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்ற சூழலிலேயே கூடுதலாக லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரையும் நடிகை வாங்கினார். இந்த காருடன் நடிகை போஸ் கொடுக்கும் படம் இப்போது சமூக வலைதளத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications








