இப்படி ஒரு அப்பா கிடைப்பது வரம்! மகன் ஆசையை நிறைவேற்ற ரூ92 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை
மகன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கும். ஆனால் பொருளாதார வசதி மற்றும் சூழல் காரணமாக மகன் கேட்ட பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஒவ்வொரு தந்தையின் தவிப்பும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்படி இருக்கையில் மகன் கேட்ட காரை தந்தை ஒருவர் தற்போது வாங்கி பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நவீன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் தனது தந்தை வாங்கி கொடுத்த பிஎம்டபிள்யூ காரை வாங்கும் வீடியோவாக அதை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் மகன் ஆசைப்படும் விஷயங்களை எல்லாம் தந்தை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா தந்தைக்கும் இருக்கும்.

ஆனால் அதற்கான பொருளாதார சூழ்நிலை மற்றும் பிற சூழ்நிலைகள் சரியில்லாததால் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் ஒவ்வொரு தந்தையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த தவிப்பை தந்தைகளிடம் தனியாக கேட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்படியான சூழ்நிலை இல்லாமல் மகன் கேட்டதை தந்தை செய்து கொடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்.
அப்படியான தந்தை தான் நவீனுக்கு கிடைத்துள்ளார். மகன் கேட்டதற்காக தந்தை 92.98 லட்ச ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்340ஐ காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த காரை அவர் வாங்கி ஓட்டிச் செல்லும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை செலவு செய்து வாங்கும் அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் என்றாலே சொகுசு கார்கள் என்று நம் எல்லாருக்கும் தெரியும்/ இதில் எம்340ஐ என்ற காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு ஸ்போர்டியான செடான் காராக உருவாக்கியுள்ளது. இந்த காரின் வெளிப்புற அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் எல்இடி ஹெட்லைட் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக இந்த காரில் 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஜெட் பிளாக் ஆக்சென்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கம் ஸ்போர்ட்டியரான, ஷார்ப்பான கிட்னி கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த காரின் வெளிப்புறத் தோற்றமாக இருக்கிறது. வெளிப்புறத்தில் இருந்து இந்த காரை பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாகவும், ரோட்டில் சென்றால் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தை பொறுத்தவரை கர்வ்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. முழுமையான டிஜிட்டலில் இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 14.9 இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் கருப்பு அல்கான்ட்ரா மற்றும் சென்சாடெக் ஆகிய நிற காம்பினேஷன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தையல் எல்லாம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் இன்ஜினை பொருத்தவரை 3.0லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 382 பிஎச்பி பவரையும் 500என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜினுடன் ஸ்பெக்ட்ரானிக் 8ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் கலர் ஆப்ஷனை பொருத்தவரை மினரல் ஒயிட், டிராவிட் கிரே, பிளாக் சஃபையர் மற்றும் டான்ஸனைட் ப்ளூ ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 72.9 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இந்த காரை வாங்கினால் ரூபாய் 92.98 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் தான் டெலிவரி எடுக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மகன் ஆசைப்பட்டு கேட்ட ஒரு விஷயத்தை என்ன ஆனாலும் சரி அதை செய்து மகனின் ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைப்பார்கள். இப்படித்தான் நவீனின் தந்தையும் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான காரை வாங்கி பரிசளித்துள்ளார். இது போன்ற பொருளாதார சூழ்நிலைகளுடன் இருக்கும் தந்தைகள் கிடைப்பது வரம் தான்.


Click it and Unblock the Notifications









