இந்த மாதிரி ஒரு அப்பா கிடைக்க வரம் வாங்கீட்டு வந்துருக்கணும்... பொண்ணுக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சு...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு கொண்டுள்ளது. இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்ந்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு பெருமையை தன்வசம் வைத்துள்ள மாருதி சுஸுகி பலேனோ கார் பரிசாக கிடைத்தால், யாராக இருந்தாலும் நிச்சயமாக மனம் சந்தோஷத்தில் திளைக்கும்.

Father Gifts Daughter A Maruti Suzuki Baleno

ஆனால் மாருதி சுஸுகி பலேனோ சற்று விலை உயர்ந்த கார் என்பதால், அவ்வளவு எளிதாக பரிசாக எல்லாம் கிடைத்து விடாது. எனினும் இளம்பெண் ஒருவருக்கு தற்போது மாருதி சுஸுகி பலேனோ கார் பரிசாக கிடைத்துள்ளது. அந்த இளம்பெண்ணுக்கு மாருதி சுஸுகி பலேனோ காரை பரிசாக வழங்கியிருப்பவர், அவரது தந்தை ஆவார்.

இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஆனந்த கண்ணீர் மல்க அந்த இளம்பெண், மாருதி சுஸுகி பலேனோ காரை பரிசாக பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Maruti Suzuki Baleno

அவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருப்பது, மாருதி சுஸுகி பலேனோ காரின் டெல்டா ஏஜிஎஸ் (Delta AGS) வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷனை, மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

அதிகபட்சமாக 88 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் டெல்டா ஏஜிஎஸ் வேரியண்ட்டின் விலை 7.95 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 9.50 லட்ச ரூபாய் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகச்சிறப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில், மாருதி சுஸுகி பலேனோவும் ஒன்றாகும். மாருதி சுஸுகி பலேனோ கார், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடனும் கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விற்பனை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதும் முக்கியமான காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 13:23 [IST]
English summary
Father gifts daughter a maruti suzuki baleno viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+