ஜூன்1 உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

ஜூன் 1ம் தேதியான இன்று உலக பெற்றோர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சிறந்த தந்தை பற்றிய ஓர் தகவல் வெளியாகியிருக்கின்றது.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் முழு ஊரடங்கு நிலவி வருகின்றது. வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கும் பொருட்டு வாகன போக்குவரத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், உயிர் காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் சில தனியார் வாகனங்கள் மட்டுமே சாலையில் பயணித்த வண்ணம் இருக்கின்றன.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

இந்த நிலை பிற நோய்க்கான சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரிதும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக, வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் வழக்கமான பரிசோதனைக்குகூட செல்ல முடியாத சூழ்நிலையை இது உருவாகியிருக்கின்றது.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவமே கர்நாடகா மாநிலம் மைசூருவில் அரங்கேறியிருக்கின்றது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நிலவி வருகின்றது. இதனால் பொதுபோக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

இந்த நிலையிலேயே தனது மகனுக்கான மருந்துகளைப் பெறுவதற்காக சுமார் 300கிமீ சைக்கிளில் பயணித்து, இளைஞர் ஒருவர் பெங்களூரு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைசூரில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். 45 வயதான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், மகனுக்கே நரம்பு பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

இதில் இருந்து அவர் மீண்டு வர வேண்டுமானால் சிறுவன் 18 வயது வரை குறிப்பிட்ட மாத்திரைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதற்கான மாத்திரைகளைப் பெறுவதற்கே ஆனாந்த் சுமார் 300 கிமீ சைக்கிளில் பயணித்து பெங்களூரு வந்திருக்கின்றார், ஆனந்த்.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

Source: The New India Express

இன்று (ஜூன் 1) உலக பெற்றோர்கள் தினம். சிறந்த பெற்றோர்களைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்1ம் தேதி இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இணைய வாசிகள் சிறந்த தகப்பான் என்ற விருதை வென்றிருக்கின்றார், மைசூரைச் சேர்ந்த ஆனந்த்.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

முன்னதாக, ஆனந்த் சிலரிடத்தில் உதவி கோரியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், லாக்டவுண் காரணத்தால் யாரும் உதவ முன் வரவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே சைக்கிளில் செல்ல அவர் திட்டமிட்டிருக்கின்றார். மகனின் நிலைமையை உணர்ந்து எந்தவொரு சமரசமும் இன்றி ஆனந்த் மேற்கொண்ட காரியம் இந்த காரியேமே அனைவரிடத்திலும் பெரிய ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

மாத்திரைகள் கடந்த புதன்கிழமை அன்றோடு தீர்ந்துவிட்டதாகவும். அதிக நாட்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக் கூடாது என்பதற்காகவும் ஆனந்த் அவரது பயணத்தை கடந்த ஞாயிறன்று தொடங்கியிருக்கின்றார். இப்பயணம் இன்றே முடிவடைந்திருக்கின்றது. ஆமாங்க, இன்றே அவர் மாத்திரைகளுடன் சொந்த ஊர் சென்று சேர்ந்திருக்கின்றார்.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

ஆனந்தின் பயணம் அவ்வளவு எளிதானது அல்ல. தற்போது கோடை வெயில் இந்திய ஒரு சில பகுதிகளை வாட்டி வதைத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சைக்கிளில் வந்து, சென்றது என ஒட்டுமொத்தமாக 600 கிமீ அவர் பயணித்திருக்கின்றார்.

உலக பெற்றோர்கள் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம்... மகனுக்காக சைக்கிளில் 300கிமீ பயணம்...

இதுதவிர, லாக்டவுண் காரணத்தினால் பணியில் இருக்கும் காவல்துறை மற்றும் பிற இன்னல்களையும் சந்தித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இணையவாசிகள் பலர் ஆனந்தை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

குறிப்பு: கடைசி நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Father Pedals 300km To Get Medicine For Special Child. Read In Tamil.
Story first published: Tuesday, June 1, 2021, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X