19வயசு பையனுக்கு இந்த பைக்கை பரிசா தந்திருக்காங்களா! பேரண்ட்ஸ் செய்ற பெரிய தப்பே இதான்! நீங்க இதை செய்யாதீங்க!
தந்தைக்கு மகன் வாகனத்தை பரிசாக தருவதும், மகனுக்கு தந்தை வாகனத்தை பரிசாக வழங்குவதும் இன்றைய காலக்கட்டத்தில் ரொம்ப சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், சரியான வாகனங்களைதான் அவர்கள் பரிசாக வழங்குகின்றார்களா என கேட்டால், பெரும்பாலான வாகன பரிசளிப்பில் இது நடப்பதே இல்லை. இந்த மாதிரியான வாகன பரிசளிப்பு சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். 19 வயசு பையனுக்கு, அவருடைய பெற்றோர்கள் கவாஸாகியின் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றனர்.
கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்6ஆர் (Kawasaki Ninja ZX6R), ஸ்போர்ட்ஸ் பைக்கையே பரிசாக வழங்கி இருக்கின்றனர். ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே சவால் விடும் வகையில் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட பைக்கே இது ஆகும். இந்த மாதிரியான டூ-வீலரை இளம் டீன்-ஏஜில் உள்ளவர்களுக்கு பரிசாக வழங்கும் முன் கொஞ்சம் யோசிப்பது நல்ல.

காலேஜ் படிக்கும் இளைஞர்கள் இந்த மாதிரியான பைக்கில் கெத்துக் காட்டுவதாகக் கூறிக் கொண்டு வீலிங் மற்றும் ரேசிங் போன்ற அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு கை கால்களை இழந்தவர்கள் மிக அதிகம். ஒரு சிலர் கவாஸாகி நிஞ்சா போன்ற உயர் திறனை வெளியேற்றும் பைக்குகளில் ஸ்டண்ட் செய்து உயிரை இழந்தவர்களும் இருக்கின்றனர்.
இதனால்தான் இந்த மாதிரியான அதீத ஆற்றலை உருவாக்கும் பைக்குகளை பதின் பருவமுள்ள இளைஞர்களுக்கு பரிசாகவோ, ஓட்டி பார்க்கவோ வழங்கக் கூடாது என்று சமூக நல ஆர்வலர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் இதைச் சற்றும் காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இப்போதும் நடைபெற்றிருக்கும் சம்பவமும் அப்படியானதாக உள்ளது. இருப்பினும், இந்த பைக் பரிசளிப்பு சலசலப்புகளைத் தாண்டி பலரின் மனதைக் கவர்ந்ததாக மாறியிருக்கின்றது. அம்மா-அப்பா, ரெண்டு பேரும் சேர்ந்து தன்னுடைய மகனுக்கு ஆச்சரிய பரிசளிப்பாக இதை வழங்கி இருக்கின்றனர். இதனால்தான் இந்த வீடியோ தற்போது இணையத்திலும் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றது.
ஆனால், இது ஓர் அதீத ஆற்றலை உருவாக்கும் பைக் என்பதால் அந்த 19 வயது இளைஞர் அதை பயன்படுத்தும்போது கொஞ்சம் கவனத்துடன் இருப்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. கவாசாகி நிஞ்சா பைக்கில் 636 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 122 பிஎச்பி மற்றும் 69 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதுமட்டுமல்ல டாப் ஸ்பீடு மணிக்கு 165 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். இந்த அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எஞ்சினைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பைக்கிற்கு இளசுகளின் பிரியமான பைக்காக கவாசாகி நிஞ்சா இசட்எக்ஸ்6ஆர் உள்ளது.
ஆனால், இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டும் ரூ. 11.53 லட்சமாக உள்ளது. இந்த அதிகபட்ச விலையின் காரணமாகவே இது பலருக்கு கனவு பைக்காகவும், எட்டாக் கனியாகவும் மாறியிருக்கின்றது. இப்போது பார்த்ததும்கூட வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதைவிட பலமடங்கு அதிகமாகவே இதன் விலை இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன பரிசளிப்பு முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. சிலர் தங்களை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான நிகழ்வுகளைச் செய்து வருகின்றனர். ஓர் வாகனத்தை பரிசாக வழங்கும் முன் அந்த வாகனம் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்குமா என்பதை பலர் பார்க்க தவறிவிடுகின்றனர். ஆகையால் இந்த தவறை நீங்கள் செய்யக் கூடாது என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.


Click it and Unblock the Notifications








