ஆடி கார் இருந்தாலும், நானோ கார் வாங்குறது தப்பில்லை... ஃபாத்திமா பாபு கலக்கல் பதில்... !!
ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற ஒரு கார் மாடலை வாங்க விரும்பினால் அதற்கு டாடா நானோ கார் பெஸ்ட் என்று பல முறை எழுதியிருக்கிறோம். குறிப்பாக, தற்போதுள்ள சூழலில் பெண்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதைவிட, காரில் செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தால் நானோ சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறோம்.
இந்த கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்யும் விதத்தில், பிரபல செய்தி வாசிப்பாளரும், அதிமுக பிரமுகருமான பாத்திமா பாபு ஒரு தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆம், ஃபாத்திமா பாபுவிடம் ஏற்கனவே ஆடி சொகுசு கார் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 3ந் தேதி பாத்திமாவுக்கு டாடா நானோ ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக வழங்கியிருக்கிறார் அவரது கணவர் பாபு. இதுகுறித்து மகிழ்ச்சியும், பூரிப்பும் கலந்த நிலைத்தகவல் ஒன்றை படங்களுடன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார் பாத்திமா.

தனக்கு தெரியாமலே, மிகவும் ரகசியமாக இந்த காரை தனது கணவர் பாபு முன்பதிவு செய்து, வாங்கி கொடுத்தார். கார் இல்லாமல் கஷ்டபடுகிறாய் என்று கரிசனத்துடன் இந்த காரை தன் கணவர் பரிசளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். டெலிவிரி பெறும்போதுதான் நானோ கார் வாங்கும் விஷயமே எனக்கு தெரிய வந்தது என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் போட்டிருந்த பதிவில், ஏராளமானோர் ஃபாத்திமா பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில், ஒருவர் ஆடி கார் வைத்திருப்பவர்கள், நானோ கார் வாங்கலாமா என்ற தொனியில் வினவியிருந்தார்.

அப்படியெல்லாம் நாமே ஒரு வரையறையை வகுத்துக்கொள்ளக்கூடாது. ஆடி இருந்தால், நானோ வைத்திருப்பது தப்பில்லை என்ற ரீதியில் பதில் கொடுத்துள்ளார். இது கவுரவ பிரச்னையால் நானோ காரை ஒதுக்குபவர்களுக்கு நிச்சயம் ஒரு படிப்பினையாக அமையும்.

நம் வசதிக்குத்தான் கார் வாங்கி பயன்படுத்துகிறோம் என்ற நினைப்பு இருந்தால், அடுத்தவர்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்பது போல இது அமைந்துள்ளது. அதுசரி, நானோ காரின் ஆட்டோமேட்டிக் மாடலை அவர்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.

முதல் காரணம் க்ளட்ச் பெடல் இல்லாமல் எளிதாக ஓட்டிச் செல்லக்கூடிய ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி உள்ளது. இரண்டாவது, அதிக மைலேஜ், மூன்றாவது, நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் எளிதாக புகுந்து செல்ல முடியும்.

பவர் ஸ்டீயரிங்குடன் இப்போது கிடைக்கிறது என்பதுடன், பார்க்கிங் செய்வதும் எளிது. மார்க்கெட்டிலேயே குறைவான விலை கொண்ட ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட கார் டாடா நானோதான். இதைவிட வேறென்ன வேண்டும்.
ஃபாத்திமா பாபுவுக்கு டிரைவ்ஸ்பார்க் சார்பில் வாழ்த்துகள்!

- பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!


Click it and Unblock the Notifications