மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... கோடி ரூபாய் காரில் வந்தது அவங்களா... கேமராமேன் குடுத்து வெச்சவரு...

இந்தியாவை கடந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற திரைப்படங்களில் ஒன்று டங்கல் (Dangal). இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஃபாத்திமா ஷனா ஷேக் (Fatima Sana Shaikh). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 300டி (Mercedes Benz GLE 300d) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார். மும்பையில் (Mumbai) உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டிற்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 300டி காரில், ஃபாத்திமா ஷனா ஷேக் வந்துள்ளார்.

அந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 245 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Fatima Sana Shaikh Buys Mercedes Benz GLE 300d

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக் 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 225 கிலோ மீட்டர்களாக உள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 300டி காரின் மிகவும் முக்கியமான வசதிகள் ஆகும்.

Mercedes Benz GLE

இது இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கார் ஆகும். ஃபாத்திமா ஷனா ஷேக்கிற்கு முன்னதாக பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் பொம்மன் இராணி (Boman Irani) உள்ளிட்டோர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, நடிகைகள் நேஹா ஷர்மா (Neha Sharma) மற்றும் ரிச்சா சதா (Richa Chadda) ஆகியோரும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வைத்துள்ளனர். நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது, பிரபல கிரிக்கெட் வீரரான ஜெயதேவ் உனத்காட்டும் (Jaydev Unadkat) கூட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் மீது, இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் காதல் கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களில் வழங்கப்படும் அதிநவீன சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்தான் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

எனவே விலை அதிகம் என்றாலும் கூட, பிரபலங்கள் பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க வரிசையில் நிற்கின்றனர். ஃபாத்திமா ஷனா ஷேக்கை பொறுத்தவரையில், அவர் தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 300டி காரின் மதிப்பு சுமார் 1.15 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 23:56 [IST]
English summary
Fatima sana shaikh buys mercedes benz gle 300d viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+