தங்க நிறமா (அ) தங்கமா! ஜொலிஜொலிக்கும் ஃபோர்டு கார்ல வந்த அவரு உலக சாம்பியனா! கார பாத்ததுமே தெரிஞ்சிருக்கணும்!

இரண்டு முறை ஃபார்முலா 1 (Formula 1) உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஃபெர்னான்டோ அலோன்ஸோ. இவரே அந்த 'தங்க நிறமா அல்லது தங்கமா' என கேட்கும் அளவிற்கு ஜொலி ஜொலிக்கக் கூடிய அந்த ஃபோர்டு (Ford) காரில் வலம் வந்தவர் ஆவார். அவர் பயன்படுத்திய அந்த ஃபோர்டு காரின் துள்ளியமான மாடல் ஃபோர்டு ஜிடி ஹெரிடேஜ் எடிசன் (Ford GT Heritage Edition) ஆகும். இது ஓர் சிறப்பு பதிப்பு ஆகும்.

உலக அளவிலேயே மிகக் குறைவான நபர்களிடம் மட்டுமே இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது. அவர்களில் ஒருவரே ஃபெர்னான்டோ அலோன்ஸோ ஆவார். அவர் மோனாகோ-வின் அழகிய சாலைகளில் இந்த காரில் வலம் வந்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Fernando alonso drives custom gold ford gt in monaco

இந்த கார் பலரின் கவனத்தைக் கவரும் வகையில் அமைதிருக்கின்றது. இதற்கு அதன் கண்களைப் பறிக்கும் தங்க நிறமே காரணமாக உள்ளது. ஆமாங்க, இது வெறும் நிறம் மட்டுமே ஆகும். உண்மையான தங்கத்தை அவர் பயன்படுத்தவில்லை. தங்க நிறத்துடன் சேர்த்து சிவப்பு நிறத்தாலும் அவர் அந்த காரை அலங்கரித்திருக்கின்றார்.

இது அக்காருக்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இத்துடன், '5' என்கிற எண்ணும் அந்த காரின் பான்னெட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தை அந்த காருக்கு வழங்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த எண்ணை சேர்த்தது, தங்க நிறம் பூசியது என அனைத்தையுமே ஃபெர்னான்டோ அலோன்ஸோ பிரத்யேக கார் வண்ண பூச்சு நிபுணர்கள் வாயிலாக செய்திருக்கின்றார்.

இதுமாதிரயான வேலைப்பாடுகளாலேயே அந்த கார் சாலையில் பயணிக்கும் தங்கம் ரதத்தை போல் மாறி இருக்கின்றது. இதுவே அக்கார் பலரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றது. வழக்கமான ஃபோர்டு ஜிடி ஹெரிடேஜ் எடிசனைக் காட்டிலும் இது கொஞ்சம் ஸ்பெஷலான கார் மாடல் ஆகும்.

இதனை 1966 டேடோனா வின்னிங் ஜிடி 40 (1966 Daytona-winning GT40) மாடலை தழுவியே உருவாக்கி இருக்கின்றனர். இந்த காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்பக்கமும் மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. அத்துடன், வீல்களையும் அப்கிரேட் செய்திருக்கின்றார். இது அந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது.

G-old ford gt heritage edition rear

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.5 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 660 எச்பி மற்றும் 745 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக இதன் டாப் ஸ்பீடு நம்ப முடியாத ஒன்றாக இருக்கின்றது.

மணிக்கு 436 கிமீ வேகத்திலேயே அந்த கார் செல்கின்றது. இது மட்டுமல்ல 3 செகண்டுகளுக்கு உள்ளாகவே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த கார் எட்டிவிடும். இத்தகைய அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட காரிலேயே இரண்டு முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஃபெர்னான்டோ அலோன்ஸோ மோனாகோ சாலையில் வலம் வந்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தங்க நிறம் கொண்ட இந்த கார் சாலையில் வலம் வந்தது தங்கமே வாகனமாக சாலையில் வலம் வந்ததைப் போல உள்ளது. ஆனால், இந்த கார் தங்கத்தை விட பலமடங்கு அரிய வகை வாகனம் ஆகும். இந்த காரின் உண்மையான மதிப்பு இன்னும் யாரும் அறியப்படாத ஒன்றாக உள்ளது. இதன் மதிப்பு 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் நம்பப்படுகின்றது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 15 கோடிக்கும் அதிகமான விலைக் கொண்டதாக இது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 22, 2025, 15:30 [IST]
English summary
Fernando alonso impresses in custom gold ford gt heritage edition during monaco outing
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X