ஒரு லிட்டர் பெட்ரோல் 160 ரூபாவா! இந்தியன் ஆயில் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த ஃபெர்ராரி கார்..
ஒரு லிட்டர் பெட்ரோலை நிரப்பவே இங்கே பலருக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றது. மேலும், நம் நாட்டில் இப்போதும் ஒரு சிலர் 50 ரூபாக்கும், 60 ரூபாக்கும் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் ஃபெர்ராரி (Ferrari) சூப்பர் கார் உரிமையாளர் ஒருவர், அடித்தட்டு மக்களின் ஒரு மாச சம்பளத்திற்கு எரிபொருளை நிரப்பி இருக்கின்றார். இதுபற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், வீடியோவில் லிட்டர் ஒன்று ரூ. 160 என காண்பிக்கப்பட்டு இருக்கின்றது.
இது பலரை அதிர்ச்சியில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகபட்சமாக ரூ. 102 வரையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 160 செலவிட்டு ஃபெர்ராரி கார் உரிமையாளர் நிரப்பி இருக்கின்றார்.

ஃபெர்ராரி கார் வச்சிருந்தா பெட்ரோலை அதிக விலைக்கு விற்பாங்களோ என்கிற கேள்வியையே நம் மத்தியில் இந்த நிகழ்வு எழுப்பி இருக்கின்றது. அதேநேரத்தில் இந்தியாவில் பிரீமியம் எரிபொருள் சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. உதாரணமாக இந்தியன் ஆயிலின் எக்ஸ்பி 100 (XP 100) எரிபொருளைக் கூறலாம்.
இதன் ஒரே ஒரு லிட்டரே இந்தியாவில் ரூ. 160 என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இந்த பெட்ரோலையே 80 லிட்டர் வரை ஃபெர்ராரி கார் உரிமையாளர் நிரப்பி இருக்கின்றார். 80 லிட்டரை நிரப்பியதற்கு அவருக்கு ரூ. 12,800 வரை செலவாகி இருக்கின்றது. இதை வெளிக்காட்டக் கூடிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
இது நம்மில் பலருக்கு ஒரு மாத சம்பளம் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அளவு பெரிய தொகையையே ஒரே ஒரு முறை டேங்கை நிரப்புவதற்கு ஃபெர்ராரி கார் உரிமையாளர் செலிவிட்டிருக்கின்றார். எக்ஸ்பி 100 என்பது 100 ஆக்டேன் வகை பெட்ரோல் ஆகும். எஞ்சினின் சிறந்த இயக்க ஆற்றலை பெறுவதற்கு இந்த வகை ஆயில் உகந்ததாகக் காட்சியளிக்கின்றது.
இதனால்தான் உயர் செயல்திறன் கொண்ட கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் இந்த மாதிரியான பிரீமியம் வகை பெட்ரோலை பயன்படுத்துகின்றனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலவற்றில் இந்த மாதிரியான எரிபொருள் எந்த விதமான தடையுமின்றி கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த வீடியோவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றது ஃபெர்ராரி 812 சூப்பர் ஃபாஸ்ட் கார் மாடல் ஆகும்.

இது 812எஸ்எஃப் என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 5.20 கோடிக்கும் அதிகம் ஆகும். ஃபெர்ராரி நிறுவனத்தின் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரில் வி12, 4 வால்வு டிஓஎச்சி எஞ்சினே பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 789 பிஎச்பி ஆற்றலையும், 718 என்எண் டார்க்கையும் வெளியேற்றும்.
7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிமீ ஆகும். மேலும், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 வினாடிகளே போதுமானதாக உள்ளது. இத்தகைய அதிக ஆற்றலை பெறவே ஃபெர்ராரி கார் உரிமையாளர் எக்ஸ்பி 100 பெட்ரோலை தன்னுடைய சூப்பர் காரில் நிரப்பி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் பயனர்கள் பெரும்பாலானோர் தங்களின் சூப்பர் கார்களுக்கு பிரீமியம் எரிபொருளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த எரிபொருள் எப்படி விலையில் காஸ்ட்லியானதோ அதைப்போலவே செயல்பாட்டிலும் உயர்ந்த ஒன்றாக இருக்கும். இதனால்தான் சில வழக்கமான கார் உரிமையாளர்களும் இந்த வகை ஆயிலை தங்களின் கார்களில் பயன்படுத்தி வருகின்றனர். இது எஞ்சின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications









