ஸ்பெயினில் அமையும் ஃபெராரியின் பூலோக சொர்க்கபுரி!!
அபுதாபியை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் ஃபெராரியின் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்கா பார்சிலோனா நகரில் இருக்கும் போர்ட்அவென்டியூரா ரிசார்ட் வளாகத்திலேயே அமைக்கப்பட உள்ளது.
பூலோக சொர்க்கபுரியாக உருவாகும் இந்த ஃபெராரி பொழுதுபோக்கு பூங்கா சுற்றுலாப் பயணிகளையும், ஃபெராரி ஆர்வலர்களையும் வெகுவாக கவரும் வகையிலான அம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. இந்த புதிய பொழுதுபோக்கு பூங்கா குறித்த கூடுதல் தகவல்கள், மாதிரி படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரி பிராண்டு
இந்த பூங்காவை அமைப்பதற்கும், நிர்வகிப்பதற்குமான பொறுப்புகளை போர்ட்அவென்டியூரா ரிசார்ட் நிறுவனம் ஏற்கும். ஃபெராரி பெயரையும், பிராண்டு சின்னத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படும். தனது பிராண்டு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள போர்ட்அவென்டியூரா ரிசார்ட் நிறுவனத்துக்கு ஃபெராரி அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட பூங்கா
இந்த பிரம்மாண்ட பொழுதுபோக்கு பூங்கா 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படுகிறது.

அதிவேக ரோலர்கோஸ்ட்டர்
இந்த பூங்காவில் உலகின் அதி உயரத்தில் செல்லக்கூடியதும், அதிவேகம் கொண்ட ரோலர்கோஸ்டரும் அமைக்கப்பட உள்ளது.

இதர அம்சங்கள்
ஃபெராரி காரில் ஓட்டும் அனுபவத்தை வழங்கும் சிமுலேட்டர், 5 ஸ்டார் ஓட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகளும் இருக்கும்.

ஃபெராரி அதிகாரி உறுதி
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவதை உறுதிப்படுத்திய ஃபெராரி அதிகாரி ஆன்ட்ரியா பெரோன், அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்டு போன்று ஃபெராரி பிராண்டில் புதிய பொழுதுபோக்கு பூங்காக்களை அமைப்பதற்கு ஏராளமான வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன," என்று கூறினார்.

திறப்பு விழா?
வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








