சொமாட்டோ கம்பெனி சிஇஓ சொகுசு கார்களில் புரள்கிறாரு!! வீட்டில் இருந்து வெளியே வந்த அவரது ஃபெராரி கார்!

செல்வந்தர்கள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பது தெரிந்த விஷயமே. வீட்டில் ஏற்கனவே 3, 4 சொகுசு கார்கள் இருப்பினும், புதியதாக ஒன்றை வாங்கி தனது கேரேஜில் இணைத்துக் கொள்வர். அந்த வகையில், சொமாட்டோ (Zomato) சிஇஓ தீபிந்தர் கோயல் புதியதாக விலையுயர்ந்த அஸ்டன் மார்டின் டிபி12 காரை வாங்கியிருந்ததை சமீபத்தில் நமது செய்தித் தளத்தில் தெரிவித்து இருந்தோம். இவரிடம் ஃபெராரி ரோமா (Ferrari Roma) காரும் உள்ளது. இந்த நிலையில், சொமாட்டோ சிஇஓ-இன் ஃபெராரி ரோமா கார் அவரது வீட்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனமான சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ-ஆக இருப்பவர் தீபிந்தர் கோயல். இவர் லக்சரியான கார்களை வாங்குவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அஸ்டன் மார்டின் டிபி12, பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன், ஃபெராரி ரோமா, போர்ஷே 911 டர்போ எஸ், லம்போர்கினி உருஸ், போர்ஷே கர்ரேரா எஸ் என ஏகப்பட்ட விலையுயர்ந்த கார்கள் இவரிடம் உள்ளன.

ferrari roma of zomato ceo

இதில், சமீபத்தில் தீபிந்தர் கோயல் வாங்கியது அஸ்டன் மார்டின் டிபி12 ஆகும். இந்தியாவில் இந்த அஸ்டன் மார்டின் காரை வாங்கிய முதல் நபர் தீபிந்தர் கோயல் ஆவார். இந்த கார் மட்டுமின்றி, இவரிடம் உள்ள அனைத்து விலையுயர்ந்த கார்களும் புத்தம் புதியதாக மாடர்ன் தரத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றான ஃபெராரி ரோமா கார் தற்போது சாலையில் காட்சி தந்துள்ளது.

தீபிந்தர் கோயலின் ஃபெராரி ரோமா கார் இதற்குமுன்பு கூட ஒருமுறை பொது சாலையில் காட்சி தந்திருந்தது. இந்த கார் தற்போது மீண்டும் கேரேஜில் இருந்து சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயலிடம் சிவப்பு நிறத்தில் ஃபெராரி ரோமா கார் உள்ளது. சாலைக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஃபெராரி கார் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.

ferrari roma of zomato ceo

இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டது போன்று உள்ளது. ஆனால், மும்பையில் எந்த இடம் என்பது சரியாக தெரியவில்லை. ஃபெராரி நிறுவனம் ரோமா காரை கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த 3 வருடங்களில் இந்த ஃபெராரி காரை இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே வாங்கியுள்ளனர். அவர்களுள் சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயலும் ஒருவர் ஆவார்.

மற்ற ஃபெராரி கார்களுடன் ஒப்பிடுகையில், ஃபெராரி ரோமா காரின் தோற்றம் கொஞ்சம் வித்தியாசமானது என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் பெயர் இந்த காருக்கு சூட்டப்பட்டுள்ளது. ஃபெராரி, இத்தாலி நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் சந்தையை கொண்டிருக்கும் ஃபெராரி இந்தியாவில் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே தனது மார்க்கெட்டை துவங்கியது.

ferrari roma of zomato ceo

2021ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்திருப்பினும், தற்போதுவரையில் மும்பையில் மட்டுமே ஃபெராரிக்கு ஷோரூம் உள்ளது. சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் வைத்திருக்கும் ஃபெராரி ரோமா காரின் தோற்றத்தை பொருத்தவரையில், இந்த காரின் முன்பக்கத்தில் டி.ஆர்.எல்-களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் செட்-அப் வழங்கப்படுகிறது.

இந்த காரின் பின்பக்கத்தில் டெயில்லேம்ப்கள் 4 பாகங்களாக வழங்கப்படுவதை தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவிலும் காணலாம். இந்த ஃபெராரி காருக்கு உள்ளே 8.4-இன்ச்சில் மாத்திரை வடிவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. 3.9 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்கிற பவர்ஃபுல்லான என்ஜினை பெறும் இந்த ஃபெராரி ரோமா காரை ரூ.4.3 கோடியில் தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபெராரி கார்களுக்கு அடையாளமே சிவப்பு நிறம் ஆகும். அதனை நன்கு உணர்ந்து, ஃபெராரி ரோமா காரை சிவப்பு நிறத்தில் சொமாட்டோ சிஇஓ வாங்கி பயன்படுத்தி வருகிறார். இவ்வாறான கார்களை அடிக்கடி வெளியே எடுக்க மாட்டார்கள். எதாவது பார்டி, திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே வெளியே எடுப்பார்கள். ஏனெனில், அந்த அளவிற்கு இத்தகைய கார்களின் மெயிண்டெனன்ஸ் அதிகம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 12:28 [IST]
English summary
Ferrari car of zomato ceo deepinder goyal spotted on road video gone viral
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X