அம்மாடியோவ்... 40 மஞ்சள் நிற ஃபெராரி கார்களை சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்கர்!

By Saravana

ஃபெராரி கார் வாங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. மதிப்பும், மரியாதையும் பெற்றிருக்கும் இந்த பிராண்டு கார்களை வாங்குவதற்கு பணம் மட்டுமல்ல, சில கூடுதல் தகுதிகளும் தேவைப்படுகிறது.

ஒரு ஃபெராரி வாங்கிவிட்டாலே, பெருங்கனவை அடைந்துவிட்ட சந்தோஷத்தை பெறுபவர்கள் மத்தியில், அமெரிக்காவின், க்ரீன்வில் பகுதியை சேர்ந்த பில் என்பவர் ஆண்டுக்கு ஒன்றாக 40 ஃபெராரி கார்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார். அத்துடன், அவற்றை மிகச் சிறப்பாகவும் பராமரித்து வருகிறது.

ஃபெராரி ஆர்வம்

ஃபெராரி ஆர்வம்

கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு புதிய ஃபெராரி காரை வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது கராஜில் பல அரிய வகை மாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

 மஞ்சள் மயம்

மஞ்சள் மயம்

பில் கராஜிற்குள் நுழைந்தவுடன் மங்களகரமாக இருக்கிறது. ஆம், அங்கு நிறுத்தியிருக்கும் 40 ஃபெராரி கார்களும் மஞ்சள் நிறம் கொண்டவை.

 ஏன் மஞ்சள்?

ஏன் மஞ்சள்?

இதுபற்றி கேட்கும்போது, ஃபெராரி என்றாலே சிவப்பு என்பதுடன், எக்கச்சக்க சிவப்பு ஃபெராரி கார்கள் இருக்கின்றன. அதில், சற்று தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக மஞ்சள் ஃபெராரிகளை ஆர்டர் செய்து வாங்குவதாக கூறுகிறார்.

 முதல் கார்

முதல் கார்

1983ம் ஆண்டு முதலாவதாக 1984ம் ஆண்டு மாடல் ஃபெராரி 308 ஜிடிஎஸ் க்வாட்ரோவால்வோலே காரை வாங்கியிருக்கிறார். அதுமுதல் ஃபெராரி கார்களின் மீது தீராத காதல் கொண்டு சேகரிக்க துவங்கியுள்ளார்.

கார் ஆர்டரிலும் ருசிகரம்

கார் ஆர்டரிலும் ருசிகரம்

புதிய கார் வந்தவுடன் ஆர்டர் செய்து வாங்குவது அவரது வழக்கமில்லை. மாறாக, ஒவ்வொரு மாடலின் கடைசி காரை ஆர்டர் செய்து வாங்குவதையும் அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பில்-லுக்கு பிடித்த மாடல்கள்

பில்-லுக்கு பிடித்த மாடல்கள்

பில் கராஜில் இருக்கும் அவரது பிடித்தமான ஃபெராரி மாடல் குறித்து கேட்கும்போது, 1967ம் ஆண்டு ஃபெராரி 275 ஜிடிபி/4 மாடல், 1975ம் ஆண்டு ஃபெராரி 365 ஜிடி4 பிபி மாடல் மற்றும் 2003ம் ஆண்டு ஃபெராரி என்ஸோ ஆகிய கார்கள் தனக்கு மிகவும் பிடித்தமானது. இருப்பினும், இதுபோன்று குறிப்பிட்டு கூறுவதும் கடினம் என்றும் அவர் கூறுகிறார்.

 அரிய மாடல்

அரிய மாடல்

பில் கராஜில் ஃபெராரி எஃப்எஃப்எக்ஸ் காரும் உள்ளது. இது ஃபெராரியின் சிறப்பு அழைப்பின் பேரில் மட்டும் குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Photo Source: Clint Davis Photography

More from DriveSpark

Article Published On: Thursday, August 20, 2015, 10:08 [IST]
English summary
Owning a Ferrari is a dream for many. Imagine owning over 40 of them, and every single one of them in yellow!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+