உங்க ஷூ, டிசர்ட்ல ஃபெராரி லோகோ இருக்குதா? இது போலியா கூட இருக்கும்! இப்ப என்ன ஆச்சு தெரியுமா?
ஃபெராரி நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனையாகி வந்த போலி ஃபெராரி தயாரிப்புகளை கண்டுபிடித்து அதை அளித்துள்ளனர். 4 லட்சம் தயாரிப்புகள் கடந்து 2023ம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் போலியான தயாரிப்புகள் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில் இதற்கு எதிராக நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
ஃபெராரி நிறுவனம் தனது பிரதான தயாரிப்பாக சூப்பர் கார்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. உலகத்தரமான வாகனங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக இருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

அதிக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. ஃபெராரி நிறுவனம் வெறும் சூப்பர் கார்களை மட்டுமல்லாமல் மெர்செண்ட் மூலமாக மற்றும் மற்ற சில தயாரிப்புகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஃபெராரி நிறுவனம் மற்ற தயாரிப்புகள் மூலம் தனது கார்களுக்கு விளம்பரத்தை தேடி வரும் நிலையில், ஃபெராரி மெர்செண்டின் போலியான தயாரிப்புகள் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் போலி தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.இந்நிலையில் இந்த போலி தயாரிப்புகளுக்கு எதிராக ஃபெராரி நிறுவனம் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மட்டும் ஃபெராரி நிறுவனம் மற்றும் 4 லட்சத்திற்கும் அதிகமான போலி ஃபெராரி தயாரிப்புகளை கண்டறிந்து அதை முற்றிலுமாக அளித்துள்ளதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் டி-சர்ட், கண்ணாடி, வாட்ச், பெல்ட் என பல்வேறு தயாரிப்புகள் உள்ளடங்குகிறது. இப்படியான தயாரிப்புகளை இந்தியாவிலும் நாம் பல்வேறு பகுதிகளில் காண முடியும்.
30,161 போலி ஃபெர்ப்யூம், 91ஆயிரம் போலி கண்ணாடிகள், 61 ஆயிரம் போலி வாட்ச்கள், 17,438 போலி ஷூக்கள், 13,000 போலி பெல்ட்டுகள், 872 ஸ்கேல் மாடல்கள், 57 ஆயிரம் வாலெட்டுகள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான டி-சர்ட், 17,231 பேக்குகள், 11,500 லேபிள்கள், 192 பந்துகள், 800 ஸ்கிட் ஸ்கூட்டர்கள் போலிகள் என கண்டுபிடிக்கப்பட்டு அதை முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளன. இதில் சுவரஸ்மான விஷயம் இந்த பட்டியலில் 3 போலி கார்களும் உள்ளன.
இப்படியான போலி தயாரிப்புகளில் ஃபெராரி நிறுவனத்தின் குதிரை லோகோ அல்லது ஃபெராரி நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்டிருக்கிறதுஇவை எல்லாம் அந்நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் அச்சிடப்பட்ட தயாரிப்புகள் என்பதால் இது சட்டவிரோதமான தயாரிப்புகள் என அவையெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்த போலியான தயாரிப்புகளை எப்படி கண்டுபிடித்தது எப்படி இதையெல்லாம் பரிந்துரை செய்தது என்ற விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. எந்தெந்த பகுதிகளில் இந்த போலி தயாரிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற விபரங்களையும் வெளியிடவில்லை.
ஃபெராரி நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் போலி தயாரிப்புகளை கண்டுபிடிப்பதற்காக ஆன்ட்டி கவுண்டர்ஃபீடிங் என்ற ரிவார்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதன்படி யார் வேண்டுமானாலும் உலகில் எந்த இடத்திலும் ஃபெராரி நிறுவனத்தின் போலியான தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு கமர்சியல் மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தால் இது குறித்து ஆதாரங்கள் என்ன வகையான தயாரிப்பு விற்பனை செய்யப்படுகிறது?
எந்த இடத்தில் இந்த விற்பனை நடக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் அது குறித்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஃபெராரி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். ஃபெராரி நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி கமர்ஷியல் ரீதியாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது என்பது குற்றமாகும். அதே நேரம் தனிநபர்கள் அந்த லோகோவை பயன்படுத்த எந்தவித தடையும் கிடையாது.
தனி நபர்கள் தங்கள் கார்களில் அந்த லோகோவை ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்வது, தங்கள் டிசர்ட்களில் அதை பிரிண்ட் செய்வது கொல்வது என்பது எந்த விதமான பிரச்சினையும் இல்லாத விஷயமாகும். அதை கமர்சியலாக விற்பனை செய்வது மட்டுமே குற்றமான விஷயமாகும். இதற்கான டிரேடு மார்க்கையும் எந்த நிறுவனமும் பெற முடியாது.
நீங்களும் இப்படியாக மார்க்கெட்டில் ஃபெராரி நிறுவனத்தின் போலியான தயாரிப்புகள் பலவற்றை கடந்து வந்திருக்கக்கூடும். உங்களுக்கு இந்த தயாரிப்புகள் போல என்ற தகவல் நிச்சயம் தெரிந்திருக்கும் இனி இப்படியான தகவல் தெரிந்தால் இதை நீங்களே ஃபெராரி நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி இப்படியான போலி தயாரிப்புகள் குறித்த தகவலை நிறுவனத்திற்கு வழங்கலாம்.இப்படியாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரிவார்டுகளும் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்த்து கருத்து: ஃபெராரி நிறுவனத்தின் பெயர் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சில தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஃபெராரி தயாரிப்புகள் என்ற போலியான பின்பத்தை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அவர்களுக்கு அந்நிறுவனம் ஆப்பு வைத்துள்ளது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








