மைக்கேல் சூமேக்கர் குணமடைய பிரார்த்தனை கூட்டம் நடத்தும் ஃபெராரி!

ஃபார்முலா-1 உலகின் ஜாம்பவானான மைக்கேல் சூமேக்கருக்கு இன்று 45வது பிறந்தநாள். ஆனால், பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்தில் சிக்கி கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூமேக்கர் விரைவில் குணமடைய உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 1996 ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஃபெராரி அணியின் சார்பில் ஃபார்முலா-1 பந்தயங்களில் பங்கேற்று 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் மைக்கேல் சூமேக்கர். ஃபெராரியுடன் மிக நெருக்கமான தொடர்புடைய மைக்கேல் சூமேக்கர் விரைவில் குணமடைய வேண்டி அமைதி பிரார்த்தனை கூட்டத்துக்கு ஸ்குடேரியா ஃபெராரி அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Michael Schumacher

மைக்கேல் சூமேக்கர் சிகிச்சை பெற்று வரும் பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரெனோபிள் பல்கலைகழக மருத்துவமனை வளாகத்தில் இந்த பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. விருப்பமுடைய ஃபெராரி கார் உரிமையாளர்கள் தங்களது உள்ளூர் கிளப் மூலம் பதிவு செய்து கொண்டு இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஃபெராரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளது.

மைக்கேல் சூமேக்கர் மிக விரைவாக பூரண குணமடைய டிரைவ்ஸ்பார்க் தளம் வாழ்த்துகிறது!

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2014, 15:15 [IST]
English summary
Today, January 3rd happens to be Formula 1 legend Michael Schumacher's birthday. Schumacher turns 45 today even as he continues to fight for his life following the freak accident during his skiing trip.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+