அடேங்கப்பா... மூன்று மடங்கு கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்த லாஃபெராரி!

Written By:

ஃபெராரி கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதாகப்பட்டது, நம்முடைய கார்கள் நாள் ஆக ஆக மதிப்பு குறையும். ஆனால், ஃபெராரி கார்களின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டுக்கு எகிறும். அந்த அளவுக்கு மிகவும் பிரத்யேகமான பொக்கிஷமாக கார் சேகரிப்பாளர்கள் மத்தியில் ஃபெராரி கார்களுக்கு அதிக மவுசு இருக்கிறது.

அதுபோன்று, ஃபெராரி நிறுவனத்தின் புதிய மாடலான லாஃபெராரி காரும் கோடீஸ்வரர்களின் கனவு காராக இருக்கிறது. குறைந்தது 5 ஃபெராரி கார்களை வாங்கியவர்களை தேர்ந்தெடுத்து, இந்த காரை விற்பன செய்கிறது ஃபெராரி. எனவே, இந்த காருக்கு மதிப்பு அதிகம். மேலும், விற்பனைக்கு விடப்பட்டு 9 மாதங்களில் அனைத்து கார்களும் விற்றுவிட்டன.

இந்த நிலையில், பொக்கிஷமாக கருதப்படும் லாஃபெராரி கார் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நேப்பிள்ஸ் என்ற நிறுவனம் அதனை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் தயாரிக்கப்பட இருக்கும் 499 லாஃபெராரி கார்களில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது 120 கார்கள் மட்டுமே. அதிலும், நீண்டகாலமாக ஃபெராரி வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை

விற்பனை

அமெரிக்காவிற்காக ஒதுக்கப்பட்ட 120 கார்களில் ஒரு கார் இப்போது யூஸ்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் ஸ்டீவ் வின் என்பவர் ஃபெராரி நிறுவனத்திடமிருந்து ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அது ஒரு கருப்பு நிற லாஃபெராரி. மொத்தம் 202 மைல் தூரமே ஓடியிருக்கிறது.

மதிப்பு

மதிப்பு

ஸ்டீவ் வின்னிடமிருந்து 3 மில்லியன் டாலரை கொடுத்து புளோரிடாவை சேர்ந்த நேப்பிள்ஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதனை இப்போது, 5 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

 ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் தொழில்நுட்பத்திலான இந்த காரில் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 963 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் கடந்துவிடும் என்பதோடு, மணிக்கு அதிகபட்சமாக 350 கிமீ வேகம் வரை செல்லும்.

 உண்மையான விலை

உண்மையான விலை

இந்த கார் 1.7 மில்லியன் டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10.39 கோடி விலை கொண்டது. இப்போது 32 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
One of the most desired supercar at the moment is undoubtedly the Ferrari LaFerrari. The Italian manufacturer would let one own this only if the person had owned five other particular Ferraris. So how else would a person own such a beautiful LaFerrari? Well, the second hand market is always there!
Story first published: Tuesday, June 16, 2015, 12:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark