பணக்காரர்கள் என்று கூட பார்க்கலேயே!! வீட்டிற்கு சென்று கார்களை பறிமுதல் செய்த போலீசார் - ரொம்ப தைரியம் தான்!

ஹைதராபாத்தில் பொது சாலையில் ரேசிங்கில் ஈடுப்பட்டதற்காக ஃபெராரி, லம்போர்கினி உள்பட 6 விலையுயர்ந்த கார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் யார் என்பதையும், அவர்களுக்கு போலீஸார் விதித்த தண்டனை விபரங்களையும் இனி பார்க்கலாம்.

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரை சொந்தமாக வாங்க மாட்டோமா என்கிற கனவு இருக்கும். சிலர் அந்த கனவை நிஜமாக்கி இருப்பர், ஆனால் சிலர் இன்னமும் அந்த கனவை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். ஒரு சிலரோ புதுசா காரை எல்லாம் நம்மால் வாங்கவே முடியாது என ஒதுங்கி இருப்பர். ஏனெனில் அவர்களது பொருளாதார சூழல் அவ்வாறானதாக இருக்கும்.

luxury cars racing in hyderabad

ஆக, எல்லாருக்கும் கார்கள் மீது ஆசை இருக்கும். ஒரு காரை புதியதாக வாங்கிவிட்டால் அதற்கு வாங்கிய கடனை அடைக்கவே நமது முழு ஆயுளும் முடிந்து விடுகிறது. ஆனால், வீட்டில் ஏற்கனவே பல்வேறு லக்சரி கார்கள் இருந்தப்போதிலும், புதியதாக இன்னொரு காரை வாங்கி போடுவோம் என எண்ணும் செல்வந்தர்களுள் சிலர் விலையுயர்ந்த கார்களை கூட ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

அவ்வளவு காசு கொடுத்தும் வாங்கும் காரின் மீதே அத்தகையவர்களுக்கு அக்கறை இல்லாத போது, சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் மீதா அக்கறை இருக்க போகிறது. மொத்த சாலையும் அவர்களுடையதுதான் என்பது போல் இரவு நேரங்களில் ஆக்ரோஷமாக கார் ஓட்டும் பணக்காரர்கள் பலரையும், அவர்களது கார் ஏற்படுத்திய சேதங்களை அடுத்த நாள் காலையில் செய்திகளிலும் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அப்படியொரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பொது சாலையில் கார் பந்தயத்தில் ஈடுப்பட்டதாக கூறி 5 பணக்காரர்கள் மற்றும் 1 ஓட்டுனர் மீது ஹைதராபாத், நர்சிங்கி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை 14ஆம் தேதி கோகாபேட்டை கிராமத்தின் மூவி டவர்ஸ் சாலையில் இந்த கார் பந்தயத்தை அவர்கள் நடத்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்த செய்திகள் இப்போதுதான் பொதுவெளிக்கு தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் ஈடுப்பட்ட 6 பேர் மீது ஐபிசி பிரிவு 336இன் கீழ் மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட நபரது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பந்தயத்தில் இவர்கள் பயன்படுத்திய ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களின் மீதும் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ரேசில் பயன்படுத்தப்பட்ட கார்கள் போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஃபெராரி, லம்போர்கினி கார்கள் மட்டுமின்றி, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் இரு இன்னோவா கார்களும் இந்த ரேசில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. பந்தயத்தின்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 6 பேரும் தங்களது கார்களை தனித்தனியாக ஆக்ரோஷமாக ஓட்டி சோதனை செய்து பார்த்ததாகவும், பின்னர் 6 கார்களையும் ஒன்றாக நிறுத்தி பொது சாலையில் அதிவேகத்தில் ஓட்டி பார்த்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நர்சிங்கி காவல் நிலைய துணை ஆய்வாளர் எஸ் முரளி கூறுகையில், "அவர்கள் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் வேகத்தை சோதனை செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரு வாகனங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமானவை என்றாலும், அதில் ஒன்று நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மூன்று கார்களின் உரிமையை நாங்கள் இன்னும் சரிப்பார்த்து வருகிறோம். இதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கேட்டு கொண்டுள்ளோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு ஆக்ரோஷமான கார் பயணங்களில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க போலீசார் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். மேற்கூறப்பட்ட 6 பேரும் எந்த நேரத்தில் கார் ரேசில் ஈடுப்பட்டனர் என்பது தெரியவில்லை என்றாலும், எந்த நேரமாக இருப்பினும் இது தண்டனைக்குரிய குற்றமே ஆகும். இவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனைகளை வழங்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 22, 2023, 11:22 [IST]
English summary
Ferrari lamborghini cars racing in hyderabad police case booked
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+