ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

Written By:
Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

ஃபார்முலா-1 பந்தயங்களில் கலக்கிய மைக்கேல் சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி நடமாடும் மோட்டார் இல்லம் ஏலத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

ஃபார்முலா-1 பந்தயங்களில் முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் சூமேக்கர் ஃபெராரி அணி சார்பில் பங்கேற்றபோது சொகுசு வீடு போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மோட்டார் இல்லம் ஒன்றை பயன்படுத்தி வந்தார். இந்த மோட்டார் இல்லத்தை ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனமே தயாரித்து கொடுத்தது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

12 மீட்டர் நீளம் கொண்டதாக பல்வேறு வசதிகளுடன் இந்த மோட்டார் இல்லத்தை ஃபெராரி வடிவமைத்து கொடுத்ததுடன், தனது பிரத்யேமான சிவப்பு வெள்ளை வண்ணக் கலவை பூச்சுடன் இந்த பஸ்சை தயாரித்தது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை நடந்த ஃபார்முலா -1 போட்டிகளில் மைக்கேல் சூமேக்கர் வெற்றி பெற்ற தருணங்களில், தனது அணி வீரர் ரூபென்ஸ் பெரிசெல்லலோவுடன் பல முக்கிய கொள்கை முடிவுகளை விவாதிப்பதற்காக இந்த மோட்டார் இல்லத்தை பயன்படுத்தினார்.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

மேலும், பந்தய களத்தில் நீண்ட நேரம் கார் ஓட்டி வந்த பிறகு இந்த மோட்டார் இல்லத்தில் ஓய்வு எடுப்பதைற்கும், ஆலோசனைகள் நடத்துவதற்கும் மைக்கேல் சூமேக்கர் பயன்படுத்தினார்.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இவேகோ ஓர்லண்டி பஸ்சில்தான் இந்த மோட்டார் இல்லம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஸ்சில் இருக்கும் எஞ்சின் 380 எச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. இசட்எஃப் நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏர் சஸ்பென்ஷன் வசதியும் கொண்டது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இந்த ஃபெராரி மோட்டார் இல்லம் இரண்டு பிரிவுகளாக தடுக்கப்பட்டு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார் இல்லத்தின் ஒரு அறையில் எல்சிடி டிவிகள், கம்ப்யூட்டர் டேபிள், சேட்டிலைட் போன், இணைய வசதி, உடை மாற்றும் அறை மற்றும் உடற்பயிற்சி கருவிகளுடன் இருந்தது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இந்த நிலையில், 2005ம் ஆண்டுட ஃபார்முலா-1 போட்டிகள் முடிந்த கையோடு, இந்த மோட்டார் இல்லத்திற்கு ஓய்வு கொடுத்தது ஃபெராரி நிறுவனம். 2009ம் ஆண்டு இந்த மோட்டார் இல்லம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இதனை வாங்கிய புதிய உரிமையாளர் இந்த ஃபெராரி மோட்டார் இல்லத்தின் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார். படுக்கை அறை, புதிய குளிர்சாதன வசதி, போஸ் மியூசிக் சிஸ்டம், மின்சார சப்ளைக்கு ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. ஆனால், வெளிப்புற வண்ணம் மட்டும் மாற்றப்படவில்லை. அதே ஃபெராரியின் சிவப்பு- வெள்ளை வண்ணக் கலவை பயன்படுத்தப்பட்டது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இந்த நிலையில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார். போனிஹாம்ஸ் நிறுவனத்தின் வழியாக வரும் பிப்ரவரி 8ந் தேதி இந்த மோட்டார் இல்லம் ஏலம் விடப்பட இருக்கிறது.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

மொத்தமே 9,000 கிமீ தூரம்தான் இந்த மோட்டார் இல்லம் ஓடியிருப்பதாகவும், மிகவும் சிறப்பான பராமரிப்பில் இருப்பதால், சிறந்த கண்டிஷனில் இயங்குவதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஏலத்திற்கு வந்த மைக்கேல்சூமேக்கர் பயன்படுத்திய ஃபெராரி சொகுசு பஸ்!

இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி விலையில் இந்த மோட்டார் இல்லம் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Ferrari motorhome used by Formula One legend Michael Schumacher is set to go up for auction at the Les Grandes Marques du Monde au Grand Palais auction by Bonhams on February 8. The Ferrari motorhome is expected to fetch between € 125,000 - 150,000 (Rs 99 lakh - 1.2 crore)
Story first published: Sunday, January 28, 2018, 11:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark