அம்பானி ஏற்கனவே இந்த காரை வாங்கிட்டாரா?.. ஷாருக்கானை டிராப் பண்ண வந்த 10 கோடி ரூபா கார்..

உலக புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான ஃபெராரி-யின் முதல் நான்கு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலே புரோசாங் ஆகும். இந்த கார் உலக அளவில் கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், இந்தியாவில் சமீபத்திலேயே அதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே ஃபெர்ராரியின் இந்த சூப்பரான தயாரிப்பை இந்தியர்கள் சிலர் வாங்கிவிட்டனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபரே இந்தியாவிலேயே முதல் ஆளாக இந்த காரை வாங்கினார்.

Ferrari purosangue uses to drop sharukh

அவர், நீரோ டேடோனா பிளாக் ஷேட் நிறத்தினாலான ஃபெராரி புரோசாங்-கையே அவர் வாங்கினார். இவரை போலவே இன்னும் சிலர் இந்தியாவில் இந்த காரை வாங்கி இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காரின் நடமாட்டம் அம்பானி இல்ல திருமண விழாவில் காணப்பட்டு இருக்கின்றது. ஆனால், இது அம்பானிக்கு சொந்தமானதுதானா என்பது தெரியவில்லை.

இருப்பினும், அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் அந்த கார் விருந்தினர்களை அழைத்து வர பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானை விமான நிலையத்தில் டிராப் செய்யகூட ஃபெராரி புரோசாங் காரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஊம்ப்லா (Voompla) எனும் இன்ஸ்டா பக்கத்தில் ஓர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கின்றது.

Ferrari purosangue

அந்த வீடியோவில் சிவப்பு நிற ஃபெராரி புரோசாங் எஸ்யூவி காரில் ஷாருக்கான் பயணிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதே வீடியோவை பகிர்ந்த ஆட்டோ மொபிலி ஆர்டன்ட் இன்ஸ்டா பக்கம் கூடுதலாக ஓர் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கின்றது. இதை வைத்தே அம்பானி குடும்பத்தினர் இந்த காரை வாங்கியிருக்கலாம் என பரவலாகக் கூறப்படுகின்றது.

ஆனால், இது அம்பானி குடும்பத்தினருக்கு சொந்தமானதுதான் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இல்ல விழாவில் காட்சிக்காக இந்த கார் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்கிற தகவலும் மறுபக்கம் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. முன்னதாக திருமண கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள வந்தபோது ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார்கள் பன்படுத்தப்பட்டன.

இந்த நிலையிலேயே அவரை குஜராத் ஜாம்நகர் விமான நிலையத்தில் இறக்கிவிட ஃபெராரி புரசோங் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் (ஃபெராரி புரோசாங்) இந்திய மதிப்பு ரூ. 10.5 கோடி ஆகும். இதைவிட மிக மிக அதிக விலைக் கொண்ட கார்கள்கூட அம்பானி குடும்பத்தினரிடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 200க்கும் அதிகமான கார்களே அவரிடத்தில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கோடி ரூபாய் மற்றும் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபெராரி நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பே இந்த புரோசாங் ஆகும். மிகவும் பிராக்டிக்கலான மற்றும் ஃபேமிலி பயன்பாட்டிற்கான காராகவும் இதனை ஃபெராரி தயார் செய்திருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே பின் பக்கத்தில் பூட் ஸ்பேஸ், பின் பக்க இருக்கைகள் (4 இருக்கைகள்) மற்றும் 4 கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. உலக அளவில் எஸ்யூவி ரக கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிக சிறப்பான வரவேற்பை முன்னிட்டே இந்த காரை ஃபெராரி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த காரில் உள்ள கதவுகள் எலெக்ட்ரிக்கலாக திறத்தல் மற்றும் மூடுதல் வசதிகளைத் தாங்கி இருக்கின்றது. இதுதவிர, லெதர் இருக்கை, எலெக்ட்ரோ குரோமிக் கிளாஸ் ரூஃப், 373 லிட்டர் பூட் ஸ்பேஸ் என ஏகப்பட்ட அம்சங்களை ஃபெரராரி புரோசாங் கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்தவரை ஃபெராரி புரோசாங் எஸ்யூவி காரில் 6.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 725 பிஎஸ் மற்றும் 716 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 310 கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக அளவில் சொகுசு கார்களை வைத்திருக்கும் ஓர் நபராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இவர் இந்த ஃபெராரி புரோசாங் காரை வாங்கி இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதைவிட விலை உயர்ந்த கார்கள் கூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 14:38 [IST]
English summary
Ferrari purosangue suv used to drop actor shahrukh khan in jamnagar airport here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+