ஃபெராரி பிராண்டில் புதிய லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரம் அறிமுகம்!
கிரான் பிரீமியோ வேர்ல்ட்டைம் ஆட்டோமேட்டிகா என்ற பெயரில் லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரங்களை ஃபெராரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது ஃபெராரியின் ஸ்டைலிங் சென்டர் மூலம் வடிவமைக்கபட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடெட் எடிஷன் வாட்சுகள்;
இது லிமிடெட் எடிஷன் கை கடிகாரமாக விற்பனை செய்யப்படும்.
ஃபால் / விண்டர் 2015 கலெக்ஷன் தொகுப்பின் ஒரு பகுதியாக தயாரிக்கபடும் இவை, வெறும் 300 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

பிரபாவம்;
இந்த கிரான் பிரீமியோ வேர்ல்ட்டைம் ஆட்டோமேட்டிகா லிமிடெட் எடிஷன் வாட்ச், ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கார் மூலம் பிரபாவிக்கபட்டு தயாரிக்கபட்டுள்ளது.
ஸ்குடேரியா ஃபெராரி வாட்ச்களுக்காக பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யபட்டு தயாரிக்கபட்டுள்ள இந்த வாட்ச், 256 கூறுகளை கொண்டுள்ளது.

கார்பன் ஃபைபர் பாகங்கள்;
கிரான் பிரீமியோ வேர்ல்ட்டைம் ஆட்டோமேட்டிகா லிமிடெட் எடிஷன் வாட்ச், கார்பன் ஃபைபரால் தயாரிக்கபட்டுள்ளது.
முதன்முதலாக, ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் காரில் அதிக அளவில் கார்பன் ஃபைபர் உபயோகிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.
சிகப்பு நிறம் கலந்த பிளாக் டையல், ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் காரின் சேஸி போல்ட்களை போன்றே தோற்றம் அளிக்கிறது.

நேர மண்டலங்களில் டிஸ்பிளே;
கிரான் பிரீமியோ வேர்ல்ட்டைம் ஆட்டோமேட்டிகா லிமிடெட் எடிஷன் வாட்ச், கிராண்ட் ஃப்ரீ கார் பந்தய போட்டிகளுக்கு புகழ்பெற்ற பிரத்தியேகமான நகரம் நேர மண்டலங்களின் டிஸ்பிளே கொண்டுள்ளது.
இதில், மெல்போர்ன், செபாங்க், பாரிஸிலோனா, சில்வர்ஸ்டோன், சிங்கப்பூர், சுஸூகா, சோஷி, மெக்ஸிகோ சிட்டி, சாவ் பாவ்லோ, அபு தாபி உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;
இந்த லிமிடெட் எடிஷன் வாட்ச்சை திருப்பி ஃபிளிப் செய்தால், காணப்படும் ஒளி ஊடுருவும் தன் கொண்ட டிரான்ஸ்பரன்ட் கேஸில் பிளாக் நிற கேலிபர் உள்ளது.
இந்த கேலிபர், பிரேக் கேலிபரை ஞாபகபடுத்துகிறது.

பிரத்யேக அம்சம்;
இந்த லிமிடெட் எடிஷன் வாட்சுகள், கஸ்டம் டிசைன் செய்யபட்ட டிசைன் பாக்ஸுடன் வருகின்றது.
இதில், இந்த வாட்ச் லிமிடெட் எடிஷன் வாட்ச் என பிரத்யேக (எக்ஸ்க்ளூசிவ்) முறையில் குறிப்பிடபட்டுள்ளது.

விலை;
கிரான் பிரீமியோ வேர்ல்ட்டைம் ஆட்டோமேட்டிகா லிமிடெட் எடிஷன் வாட்ச்சின் விலை, 1,585 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.05 லட்சம் ரூபாய்) ஆகும்.

விமர்சனம்;
இந்த கடிகாரத்தில், பல்வேறு நாடுகளின் நகரங்கள் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவின் நகரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications