இந்திய பார்முலா -1 போட்டிக்காக ஸ்பெஷலான ஃபெராரி பேனாக்கள்!!
இந்த மாத இறுதியில் டெல்லியில் நடைபெற இருக்கும் ஃபார்முலா - 1 போட்டிகளுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ரசிகர்களிடமும் பார்முலா- 1 ஜுரம் பற்றிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பார்முலா-1 ரசிகர்களையும், ஆட்டோமொபைல் பிரியர்களையும் கவரும் விதமாக உயர் ரக ஸ்பெஷல் எடிசன் பேனாக்கள் ஃபெராரி பிராண்டு முத்திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஷாஃபர் தயாரிப்பு
பேனா தயாரிப்பில் புகழ்பெற்ற ஷாஃபர் நிறுவனம் இந்த உயர் ரக பேனாக்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஃபெராரி முத்திரை
ஃபெராரியின் கார் பந்தய அணியான ஃபெராரி ஸ்குடேரியா முத்திரையுடன் இந்த பேனாக்கள் வந்துள்ளன. பாக்கெட்டில் சொருகினால் இந்த முத்திரை பளிச்சென தெரியும்.

அனைத்து ரகங்கள்
மை ஊற்றி எழுதும் பவுன்டன் பேனா, ரோலர் பால் மற்றும் பால் பாயின்ட் பேனாக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சிவப்பு
ஃபெராரியை சட்டென்று நினைவுப்படுத்தும் சிவப்பு வண்ணத்துடன் விருப்பம்போல் தேர்வு செய்வதற்கு ஏற்ப பல்வேறு மாடல்களில் கிடைக்கும்.

விலை
இந்த பேனாக்களில் ஃபெராரி 300 9503 பவுன்டன் பேனா ரூ.5,000 விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்குமிடம்
நாடு முழுவதும் உள்ள வில்லியம் பென் விற்பனையகங்களில் இந்த பேனாக்களை வாங்கிக் கொள்ளலாம்

ஆன்லைனில் ஆர்டர்
இல்லையெனில், www.williampenn.net என்ற இணையதளத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








