புதுப்பொலிவு பெற்ற பெருஷியோ லம்போர்கினியின் அதிவேக படகு!
உலகுக்கு சிறந்த சூப்பர் கார்களை வழங்கிய லம்போர்கினியின் உரிமையாளர் பெருஷியோ லம்போர்கினி சொந்த முயற்சியில் அதிவேக படகு ஒன்றையும் உருவாக்கினார். இத்தாலியின் ரிவா என்ற படகு நிறுவனத்தின் உதவியுடன் அந்த படகு உருவாக்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அந்த ரிவா அக்குவாராமா படகு கடந்த 1993ம் ஆண்டு பெருஷியோ மறைவுக்கு பின்னர் அரிய வகை பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர் வசம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த படகை ரிவா நிறுவனமே வாங்கி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது. தற்போது பளபளக்கும் அந்த படகு பார்ப்போரை கவர்ந்திழுத்து வருகிறது. அந்த படக்கின் அசத்தலான படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் பார்க்கலாம்.

மோசமான நிலை
பழைய அரிய வகை பொருட்களை சேகரிப்பாளர் வாங்கிய இந்த படகு 20 ஆண்டுகளாக யார்டு ஒன்றில் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மரத்தால் ஆன இந்த படகை ரிவா வாங்கி தற்போது புனரமைத்துள்ளது.

முற்றிலும் புதிது
படகின் மேற்பகுதியில் 25 கோட்டிங் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுவிட்சுகள் மற்றும் இருக்கைகள் ஆகியவை சேதமடைந்துவிட்டதால் அனைத்தும் பிடுங்கி எறிந்துவிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
லம்போர்கினி 350 ஜிடி காரின் இரண்டு 4.0 லிட்டர் வி12 எஞ்சின்களை பெருஷியோ லம்போர்கினி இந்த அதிவேக படகில் பொருத்தியிருந்தார்.

பவர்
இந்த படகில் பொருத்தப்பட்டிருந்த வி12 எஞ்சின் தலா 350 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

புதிய எஞ்சின்
இந்த படகில் இருந்த இரண்டு எஞ்சின்களில் ஒன்று லம்போர்கினி மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு பதிலாக அதே 4.0 லிட்டர் வி12 எஞ்சின் தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

வேகம்
ரிவா நிறுவனத்தின் இதே வகை படகுகள் அதிகபட்சமாக மணிக்கு 40 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். ஆனால், பெருஷியோ இந்த படகில் 350 ஜிடி காரின் எஞ்சின்களை பொருத்தியதால் மணிக்கு 48 நாட்டிக்கல் மைல் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருந்தது.

விற்பனை?
இந்த பாரம்பரியம் மிக்க படகை விற்பனை செய்யும் திட்டம் தற்போதைக்கும் இல்லை என்று ரிவா படகு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








