விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டி போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன்?

விமானங்களை விடப் பல ரூட்களில் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கான விலை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் மக்கள் பலர் விமானங்களை விரும்பாமல் ரயில் பயணத்தைத் தான் செய்கிறார்கள் இது ஏன் தெரியுமா? இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல சாலை வழியாகப் பயணிக்கலாம். நீண்ட தூரமாக இருந்தால் ரயில் மூலம் பயணிக்கலாம். இதுவே விரைவாகப் பணிக்க வேண்டும் என்றால் விமான வசதி இருந்தால் விமானத்தில் பயணிக்கலாம். ஆனால் இதில் விமான பயணம் தான் மிக அதிக விலை கொண்டது என நீங்கள் நினைத்தால் இது முற்றிலும் தவறு. நீண்ட தூரப் பயணத்திற்கு விமானத்தை விட சில ரயில்களில் விலை அதிகம் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா?

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

ரயில்களில் பொதுவாக முன்பதிவில்லாத பெட்டிகள், முன்பதிவு செய்யப்பட்ட சிலீப்பர் பெட்டி, 3 டயர் ஏசி, 2 டயர் ஏசி, இவை எல்லாவற்றையும் தாண்டி முதல் வகுப்பு ஏசி எனப் பல விதமான பெட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். முன்பதிவில்லாத பெட்டிக்கு விலை குறைவாகவும், முன்பதிவு கொண்ட சிலீப்பர் பெட்டிக்கு சற்று விலை அதிகம், அதைவிட 3 டயர் ஏசியில் அதிகம், அதை விட 2 டயர் ஏசியில் அதிகம் எல்லாவற்றையும் விட முதல் வகுப்பு ஏசியில் மிக அதிகம் என்ற விலையில் டிக்கெட் இருக்கும்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இந்த டிக்கெட் விலை என்பது ரயில்வே நிர்வாகத்தைப் பொருத்தவரை எப்பொழுதுமே ஒரே விலை தான். சீசனிற்கு தகுந்தார் போல விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் இருக்காது. ரயிலில் பிரிமியம் தட்கல் டிக்கெட்டில் மட்டும் தான் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் விமானங்களில் அப்படி அல்ல விமான பயணம் கட்டணம் என்பது சீசனிற்கு ஏற்றார் போல ஏறி ஏறி இறங்கும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் நேரங்களில் விலை அதிகமாகவும், குறைவாக மக்கள் பயன்படுத்தும் நேரத்தில் விலை குறைவாகவும் இருக்கும்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இந்நிலையில் ஏசி முதல் வகுப்பில் பயணிப்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. அதன்படி இந்தியாவில் விமானங்களில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. அந்த விலையை ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் விலையுடன் ஒப்பிடும் போது ரயிலை விட விமான பயணம் கட்டணம் குறைவாக இருக்கிறது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

உதாரணமாக டில்லியிலிருந்து சென்னை வர ரயிலில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் ரூ5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனால் பல நேரங்களில் டில்லியிலிருந்து சென்னை வரையிலான விமான டிக்கெட் ரூ5 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது. எந்த நேரத்திலும் விலை குறைவாக இருக்காது. ஆனால் பல நேரங்களில் ரயிலின் முதல் வகுப்பு டிக்கெட்டை விட விமானத்தின் எக்னாமிக் வகுப்பு டிக்கெட் விலைவாக இருக்கும்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் உள்ள 12 ரூட்களில் 1000 கி.மீ அதிகமான தொலைவில் இருக்கும் பயணங்களில் விமான டிக்கெட்டை விட ரயிலின் முதல் வகுப்பு ஏசி டிக்கெட் அதிகமாக இருக்கிறது. அதே போல 500-100 கிலோ மீட்டர் வரையிலான பயணங்களுக்கு ரயிலை விட விமானங்களில் வெறும் 5 சதவீதம் தான் பயண கட்டணம் அதிகமாக இருக்கிறது. இதுவே 500 கி.மீ குறைந்த தொலைவு என்றால் மட்டும் ரயில் கட்டணம் விமானத்தை விட 30 சதவீதம் குறைவாக இருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இந்நிலையில் பலர் ரயில்களை விட விமானத்தில் செல்வதை அதிகம் விரும்புகின்றனர். இருந்தாலும் விமான டிக்கெட் ரயில் முதல் வகுப்பு ஏசி டிக்கெட்டை விடக் குறைவாக இருந்தாலும், விமானம் விரைவாகும் செல்லும் என்றாலும் பலர் ரயில் முதல் வகுப்பு ஏசியில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் ரயில் முதல் வகுப்பு ஏசியில் இருக்கும் வசதிகள் தான். பயணத்தின் போது நமக்கென நிறைய வசதிகள் இருக்கும். நல்ல இட வசதி, இருக்கும், பயணம் சொகுசாக இருக்கும். ஆனால் விமானத்தில் எகனாமிக் வகுப்பில் நெருக்கடியான பயணம் செய்ய வேண்டியது இருக்கும் சீட்கள் ஒடுக்கமாக இருக்கும் குறைந்த நேர பயணம் தான் என்றாலும் நிம்மதியான சொகுசான பயணம் கிடைக்காது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இரண்டாவது காரணம் பல நகரங்களில் இன்னும் விமான நிலையங்கள் வரவில்லை. ஆனால் ரயில் சேவைகள் துவங்கிவிட்டன. அதனால் குறிப்பிட்ட பயணத்தை விமானத்தில் செய்ய வேண்டும் என ஒருவர் நினைத்தால் அவர் விமான நிலையம் வரை சாலை மார்க்கமாகப் பயணிக்க வேண்டும். வயதானவர்களுக்கு இது பெரும் தொல்லை.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

வயதானவர்களுக்கு இந்த அழைச்சலை ஒப்பிடும் போது அவர்கள் முதல் வகுப்பு ஏசியில் ரயில் பெட்டியில் பயணிக்கலாம் விலை விமானத்தின் எகனாமிக் வகுப்பை விட அதிகமாக இருந்தாலும், சொகுசான பயணம் என்பதால் பலர் ரயில் முதல் வகுப்பு பயணத்தை விரும்புகின்றனர்.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

ரயில் முதல் வகுப்பில் பயணித்தவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் இருக்கிறது. பொதுவாக நாம் ரயிலில் டிக்கெட் புக் செய்தால் அந்த ரயிலில் நமக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி, சீட் மற்றும் பெர்த் குறித்த விபரங்கள் வழங்கப்படும். ஆனால் முதல் வகுப்பில் டிக்கெட் புக் செய்யும் போது அப்படியான எதுவும் வழங்கப்படாது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

முதல் வகுப்பு ஏசிக்கான சீட் ஒதுக்கீடு மேனுவலாக தான் நடைபெறும். இதனால் பயணிகளின் விபரம் பார்த்து அவர்கள் புக் செய்த டிக்கெட் பார்த்து மேனுவலாக பிரித்து வழங்கப்படும். அதனால் ஒரே கேபின் வேறு வேறு டிக்கெட்டில் பயணிக்கும் ஆண்-பெண்களுக்கு வழங்கப்படாது. ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் ஆண் பெண்களுக்கு வழங்கப்படும். இப்படியான பல விஷயங்கள் ரயில் பயணத்தில் இருக்கிறது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு மக்கள் அதிகமாக விமான பயணத்தை தேர்வு செய்ய வேண்டும் என உதான் திட்டத்தை அறிவித்த குறைந்த விலையில் விமான டிக்கெட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியா போலவே வெளிநாடுகளிலும் விமான டிக்கெட்கள் குறைவாக இருக்குமா என்றால் இல்லை.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

1000 கி.மீ அதிகமான தூரத்தில் பயணிக்கும் விமானம் சர்வதேச அளவில் இருக்கும் சராசரி விலையை விட 58 சதவீதம் குறைந்த விலையிலும், 500-1000 கி.மீ வரையிலான விமான பயணம் சர்வதேச அளவை விட 62 சதவீதம் குறைந்த விலையிலும் 500 கி.மீ குறைவான விமான பயணம் 90 சதவீதம் குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

விமானங்களை விட ரயில்களில் டிக்கெட் விலை அதிகம், இருந்தாலும் மக்கள் போட்டிப் போட்டு டிக்கெட் புக் பண்ணுறாங்க ஏன் ?

இப்படி உங்கள் வாழ்வில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒன்று நீங்கள் ரயிலில் முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க வேண்டும் அல்லது விமானத்தின் எக்னாமிக் வகுப்பில் பயணிக்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்? ரயில் பயணத்தை தேர்வு செய்வீர்களா? விமான பயணத்தை தேர்வு செய்வீர்களா? உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Monday, July 25, 2022, 13:47 [IST]
English summary
Few flight Tickets cost cheaper than Train first class
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+