சுக்குநூறான காரிலிருந்து காலரை தட்டிவிட்டு வெளியேறிய டிரைவர்... அதாங்க ஃபியட் கார்!
ஃபியட் அபார்த் புன்ட்டோ கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
ஃபியட் கார்கள் கட்டுமான தரத்திலும், பாதுகாப்பிலும் சிறப்பானவை என்பது தெரிந்த விஷயம்தான். அதனை மெய்ப்பித்து காட்டுவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரத்தை தொடர்ந்து காணலாம்.

ஃபியட் அபார்த் புன்ட்டோ கார் இந்தியாவின் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஒன்று. கார் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போடும் விதத்தில், மிகவும் செயல்திறன் மிக்க காராக இருக்கிறது.

இந்த நிலையில், இந்த சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் பயங்கர விபத்தில் சிக்கி இருக்கிது. அண்மையில் தேசிய நெடுஞ்சாலை எண்- 2ல் பயணித்த ஃபியட் அபார்த் புன்ட்டோ கார் ஒன்று மணிக்கு 150 கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் டிரக் ஒன்றுடன் மோதி, சாலை ஓரத்தில் இருந்த கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பள்ளத்தில் இருந்த மரங்களின் மீது மோதியதால், அந்த கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்து நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்த பயங்கர விபத்தில், காரை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பி இருக்கிறார்.

கார் மிக மோசமாக சிதைந்து போனாலும், ஓட்டியவர் தப்பி இருப்பது ஆச்சரியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்தளவு இந்த கார் விபத்து பார்ப்பதற்கு கோரமாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், இந்த காரின் பில்லர்கள் மிக வலுவாக இருந்ததும், ஓட்டுனர் சீட் பெல்ட் அணிந்திருந்ததும், அவர் உயிர் பிழைக்க காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பக்கவாட்டில் உருண்டதால் சீட் பெல்ட் விரிவடையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து மூலமாக சீட் பெல்ட் அவசியத்தை புரிந்து கொள்ள முடிவதுடன், நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற பவர்ஃபுல் கார்களை ஓட்டும்போது மிக கவனமாக கையாள வேண்டும்.

சாலை கட்டமைப்புகள் இந்தியாவில் இன்னமும் மேம்பட வேண்டியிருப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு போதிய பக்குவமும், பயிற்சியும் இல்லாத நிலை இருப்பதையும் மனதில் கொண்டு வாகனங்களை செலுத்துவது அவசியம்.
Picture Credit: Team BHP


Click it and Unblock the Notifications








