டொயோட்டா இன்னோவா கார் இவ்ளோ தூரம் ஓடுமா! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய குடும்பம்!

ஒட்டுமொத்த உலகின் கவனத்தையே இன்று தன் பக்கம் ஈர்த்திருக்கும் ஒரு குட்டி நாடு கத்தார் (Qatar). ஃபிபா உலக கோப்பை 2022 (FIFA World Cup 2022) திருவிழா அங்கு நடைபெற்று கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். கால்பந்து (Football) ரசிகர்கள் பலரும் தற்போது கத்தாருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு செல்லும் ரசிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட விமானத்தைதான் தங்களது பயணத்திற்கு தேர்வு செய்கின்றனர். ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் மற்றவர்களை காட்டிலும் சற்று மாற்றி யோசித்துள்ளது. ஆம், இந்தியாவில் இருந்து கார் மூலமாக அவர்கள் கத்தாருக்கு சென்று சேர்ந்துள்ளனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டொயோட்டா இன்னோவா கார் இவ்ளோ தூரம் ஓடுமா! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய குடும்பம்!

கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா இப்னு அஸ்ரஃப், அவரது பெற்றோர் மற்றும் அவரது உறவினரான முகமது பராஸ் ஆகியோர்தான் இந்தியாவில் இருந்து கார் மூலம் கத்தாருக்கு சென்ற குடும்பத்தினர் ஆவர். இவர்களது பயணம் கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. சுமார் 30 நாட்கள் கார் பயணத்திற்கு பிறகு அவர்கள் கத்தாரை சென்றடைந்துள்ளனர். இந்த பயணத்திற்கு அவர்கள் பயன்படுத்தியது டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் ஆகும்.

இதுகுறித்து அப்துல்லா இப்னு அஸ்ரஃப்பின் தந்தை கேவிடி அஸ்ரஃப் கூறுகையில், ''நான் எப்போதுமே கால்பந்து ரசிகன்தான். 2022 கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நடைபெறுகிறது என்பதை கேள்விபட்ட உடனேயே, போட்டிகளை நேரில் காண வேண்டும் என நான் முடிவு செய்தேன்'' என்றார். இதுகுறித்து அவரது மகன் அப்துல்லா இப்னு அஸ்ரஃப் கூறுகையில், ''சாலை மார்க்கமாக கத்தாருக்கு செல்வது பற்றி எனது தந்தை பேச தொடங்கினார்.

ஆரம்பத்தில் இதனை நான் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதைப்பற்றி நான் யோசிக்க தொடங்கினேன். அதன்பின் இந்த பயணத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மற்றும் தேவையான பர்மிட்களை வாங்குவது என ஒரு சில வாரங்களை இதற்காக செலவிட்டேன். விமானத்தை விட்டு விட்டு கார் மூலமாக பயணம் செய்வது என்ற முடிவு சற்று வித்தியாசமானதுதான் என்றாலும் கூட, இதன் மூலமாக அவர்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளனர்.

இந்த குடும்பத்தினர் பயன்படுத்திய டொயோட்டா இன்னோவா கார் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளது. சக்தி வாய்ந்த இன்ஜின், சௌகரியமான இருக்கைகள், சிறப்பான ரைடு குவாலிட்டி ஆகியவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள். எனவே குடும்பத்துடன் தொலை தூர பயணங்களை மேற்கொள்வதற்கு பலரும் டொயோட்டா இன்னோவா காரை தேர்வு செய்கின்றனர். ஆனால் இந்த குடும்பத்தினர் நாடு விட்டு நாடு பயணம் செய்வதற்கு டொயோட்டா இன்னோவா காரை தேர்ந்து எடுத்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்தியது முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். பகல் நேர விளக்குகளுடன் ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் டெயில்லைட்களுடன் சமீபத்தில் இந்த காரை அவர்கள் மறுசீரமைத்துள்ளனர். இந்த பயணம் குறித்த மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை கேவிடி அஸ்ரஃப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த பயணம் முழுவதும் நாங்கள் பேசி கொண்டிருந்தோம்.

ஒருவரை ஒருவர் விளையாட்டாக கிண்டல் அடித்து கொண்டோம். சில சமயங்களில் மியூசிக் சிஸ்டத்தை 'ஆன்' செய்வதற்கே நாங்கள் மறந்து விட்டோம். ஏனெனில் ஒருவருக்கொருவர் அவ்வளவு மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தோம்'' என்றார். டொயோட்டா இன்னோவா காரின் வலது கை டிரைவிங் (பல நாடுகளில் இடது கை டிரைவிங்தான் நடைமுறையில் உள்ளது), கார் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஆகிய காரணங்களால் வெளிநாட்டினர் பலரையும் இவர்கள் கவர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்துல்லா இப்னு அஸ்ரஃப் கூறுகையில், ''இந்த அனுபவம் அற்புதமானதாக இருந்தது. பல மக்களை நாங்கள் சந்தித்தோம். அவர்களுடன் நண்பர்கள் ஆனோம். நிறைய மக்கள் எங்களுடன் வந்து புகைப்படங்களை எடுத்து கொண்டனர்'' என்றார். இந்தியாவில் இருந்து கத்தார் வரை டொயோட்டா இன்னோவா காரில் பயணம் மேற்கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு தற்போது சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fifa world cup 2022 indian family reaches qatar in toyota innova mpv
Story first published: Friday, December 2, 2022, 23:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X