சவுதி வீரர்களுக்கு கிடைக்க போகும் காரின் விலை இத்தன கோடியா! பெட்ரோல் வித்த காசை தண்ணி மாதிரி செலவு பண்றாங்க!

ஃபிபா உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வீரர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த பரிசு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 ஃபிபா கால்பந்து உலக கோப்பை (2022 FIFA Football World Cup) திருவிழா, ஆரம்ப கட்டத்திலேயே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் கத்தார் (Qatar) நாட்டில் இந்த தொடர் நடைபெறுவது இதற்கு காரணம் அல்ல.

சவுதி வீரர்களுக்கு கிடைக்க போகும் காரின் விலை இத்தன கோடியா! பெட்ரோல் வித்த காசை தண்ணி மாதிரி செலவு பண்றாங்க!

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தோல்விகள் அரங்கேற தொடங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். நடப்பு கால்பந்து உலக கோப்பை தொடரின் முதல் அதிர்ச்சி தோல்வியை அர்ஜென்டினா (Argentina) சந்தித்துள்ளது. சவுதி அரேபியாவிற்கு (Saudi Arabia) எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா மண்ணை கவ்வியிருப்பதுதான் விளையாட்டு உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் ஆகும். லயோனல் மெஸ்ஸி (Lionel Messi) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட, அர்ஜென்டினாவால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவிற்காக கோல் அடித்து விட்டார்தான். ஆனால் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியா இதற்கு பதில் கோல் அடித்து சரிவில் இருந்து மீண்டது. இந்த கோலை அடித்தவர் அல்-ஷெஹ்ரி (Al-Shehri). இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் சவுதி அரேபியா 2வது கோலையும் அடித்து விட்டது. சவுதி அரேபியாவின் அல்-டவ்சரி (Al-Dawsari) இந்த கோலை அடித்தார்.

முதல் கோல் அடிக்கப்பட்ட அடுத்த 5வது நிமிடத்திலேயே, அதாவது 53வது நிமிடத்திலேயே சவுதி அரேபியா 2வது கோலை போட்டது. இதற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை, சவுதி அரேபியா வீழ்த்தியது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று (நவம்பர் 23) பொது விடுமுறையை சவுதி அரேபியா அறிவித்துள்ளது. எனவே சவுதி அரேபியாவில் தற்போது உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

அதே நேரத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. சவுதி அரேபியா செல்வ செழிப்பு மிக்க நாடு என்பதால், வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Cars) கார்கள் பரிசாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக உலக கோப்பை போட்டியில் கோல் அடித்த வீரர்களுக்கு சவுதி அரேபியா ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வழங்கிய வரலாறுகள் உண்டு.

கடந்த 1994ம் ஆண்டுதான் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா விளையாடியது. அப்போது சவுதி அரேபியா கத்துக்குட்டி அணியாக கருதப்பட்டாலும், பெல்ஜியத்திற்கு (Belgium) எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. சவுதி அரேபியாவின் அல்-ஓவைரான் (Al-Owairan) அந்த போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் அந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

இதற்காக நாடு திரும்பிய பின் அல்-ஓவைரானுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. பெல்ஜியத்திற்கு எதிராக அவர் அடித்த அந்த கோல், உலக கோப்பையின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வெற்றிக்கு பின், உலக கோப்பை போட்டிகளில் சவுதி அரேபியா பெரிய அளவில் சோபிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், அர்ஜென்டினாவிற்கு எதிராக தற்போது சவுதி அரேபியாவிற்கு மிகவும் பிரம்மாண்டமான ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

எனவே இம்முறையும் அர்ஜென்டினாவிற்கு எதிராக கோல் அடித்த 2 வீரர்கள் உள்பட அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் (Mohammad Bin Salman), அர்ஜென்டினாவை வீழ்த்திய கால்பந்து அணி வீரர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom) காரை பரிசாக வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாந்தம் காரானது, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரின் ஆரம்ப விலையே 8.99 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.48 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான். வரிகள் உள்பட ஆன் ரோடு விலையை கணக்கிட்டால், இன்னும் கூடுதலாக வரும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரில், 6.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி (Mukesh Ambani) உள்பட இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார்கள் இருக்கின்றன. இவ்வளவு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் கார் பரிசாக கிடைப்பதற்கு சவுதி அரேபியா வீரர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fifa world cup football argentina saudi arabia messi qatar gift rolls royce phantom price
Story first published: Wednesday, November 23, 2022, 19:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X