திடீர் அதிரடி... வாகன உரிமையாளர்களுக்கு செக் வெச்சுட்டாங்க... தப்பி தவறி கூட உங்க வண்டில இதை பண்ணீராதீங்க!

வாகன உரிமையாளர்களுக்கு, மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கால்பந்து (Football) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபிபா உலக கோப்பை 2022 (FIFA World Cup 2022) தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறை உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை கத்தார் (Qatar) வென்றுள்ளது. இது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றாகும்.

திடீர் அதிரடி... வாகன உரிமையாளர்களுக்கு செக் வெச்சுட்டாங்க... தப்பி தவறி கூட உங்க வண்டில இதை பண்ணீராதீங்க!

எனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த உலக கோப்பையில் இந்தியா விளையாடவில்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த திருவிழாவை கொண்டாட தொடங்கியுள்ளனர். குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில்தான் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் வீட்டு சுவர்களில் தங்களுக்கு பிடித்த அணிகளின் கொடிகளை கேரள ரசிகர்கள் வரைந்து வருகின்றனர்.

அர்ஜென்டினா (Argentina), போர்ச்சுக்கல் (Portugal) மற்றும் பிரேசில் (Brazil) போன்ற அணிகளுக்குதான் கேரள மாநிலத்தில் அதிக ஆதரவு காணப்படுகிறது. வீரர்களை பொறுத்தவரையில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (Messi), போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் பிரேசிலின் நெய்மர் (Neymar) போன்ற நட்சத்திரங்களுக்கு கேரள ரசிகர்கள் அதிக ஆதரவை வழங்கி வருகின்றனர். போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்களின் வடிவில், இவர்களின் படங்களையும் தற்போது கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

அதுமட்டுமல்லாது வாகனங்களையும் கூட கேரள ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பைக்குகள் என பல்வேறு வாகனங்களையும் தங்களுக்கு விருப்பமான நாடுகளின் கொடிகள் மற்றும் வீரர்களின் புகைப்படங்கள் மூலமாக கேரள ரசிகர்கள் அலங்கரித்து வருகின்றனர். ஆனால் அனுமதி இல்லாமல் வாகனங்களின் நிறத்தை மாற்றினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை தற்போது எச்சரித்துள்ளது.

அனுமதி பெறாமல் வாகனத்தின் நிறத்தை மாற்றுவது விதிமுறைகளுக்கு எதிரானது என மோட்டார் வாகன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கால்பந்து உலக கோப்பையை முன்னிட்டு, வாகனங்களை அலங்கரிக்க நினைப்பவர்கள் மனம் தளர வேண்டியதில்லை. மோட்டார் வாகன துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விட்டு, வாகனங்களின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இதற்கு குறிப்பிட்ட தொகையை ரசிகர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பைக்குகள் மற்றும் கார்கள் என வாகனங்களின் வகையை பொறுத்து, குறிப்பிட்ட தொகையை அரசு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தி முறைப்படி அனுமதி பெறும்பட்சத்தில் மெஸ்ஸி, கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் நெய்மர் போன்ற நட்சத்திர வீரர்களின் புகைப்படங்களை வாகனத்திற்கு கொண்டு வர முடியும். அதேபோல் விருப்பமான நாடுகளின் கொடிகளையும் வரைந்து கொள்ளலாம்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், வாகனங்களின் நிறத்தை மாற்றினால் கடும் நடவடிக்கையை வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கட்டணம் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக தெரிந்து கொள்வதற்கு ஆர்டிஓ அலுவலகங்களை வாகன உரிமையாளர்கள் அணுக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் அரசுக்கு ஓரளவிற்கு வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fifa world cup strict action to be taken against those who change car bike colour without permission
Story first published: Monday, November 21, 2022, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X