ஃபிகோவுக்கு சர்ச்சைக்குரிய விளம்பரம்: அதிகாரி அதிரடி பணிநீக்கம்!
சர்ச்சைக்குரிய விளம்பரத்தை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரியை விளம்பர நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
ஃபிகோ காருக்காக ஃபோர்டு இந்தியா சார்பில் விளம்பரம் ஒன்று எடுக்கப்பட்டது. அதில், பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளுங்கள் என்ற வாசகத்துடன் பெண்களையும், பிரபலங்களையும் கை, கால்களை கட்டி டிக்கியில் போட்டு அடைத்து வைக்கப்பட்டது போன்று எடுக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுத்ததால் ஃபோர்டு இந்தியா நிறுவனம் உடனடியாக வருத்தம் தெரிவித்தது. மேலும், விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனியிடமும் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விளம்பரத்தை எடுத்த ஜேடபிள்யூடி இந்தியா நிறுவனத்தின் தலைமை ஆக்கத் துறை அதிகாரி பாபி பவார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதில் தொடர்புடைய ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் அதிகாரி விஜய் சிம்ஹா வேலங்கியும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








