சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம் தனது மாருதி சுஸுகி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

திரையுலக நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில், பலர் தங்களது அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு பொருளாகதான் வாகனங்களை பார்க்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகள்தான் வாகனங்கள் மீது கொண்ட உண்மையான காதலுக்காக அவற்றை வாங்குகின்றனர்.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜான் ஆபிரகாம் (John Abraham). இவர் வாகனங்களை உண்மையிலேயே அதிகமாக நேசிக்க கூடியவர். ஜான் ஆபிரகாமிடம் மிகவும் விலை உயர்ந்த ஏராளமான கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. இதில், கவர்ச்சிகரமான மற்றும் விண்டேஜ் மாடல்களும் அடங்கும்.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

ஆனால் அவரது கராஜில் இருந்து தற்போது ஒரு கார் குறைந்துள்ளது. அது மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy). இந்த காரை விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு, ஜான் ஆபிரகாம் நன்கொடையாக வழங்கியுள்ளார். ஜான் ஆபிரகாம் நன்கொடையாக வழங்கியிருப்பது வெள்ளை நிற மாருதி சுஸுகி ஜிப்ஸி கார் ஆகும்.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

மும்பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் 'அனிமல் மேட்டர் டூ மீ' (Animal Matter To Me - AMTM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்குதான் அவரது மாருதி சுஸுகி ஜிப்ஸி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக வலை தளப்பக்கங்கள் வாயிலாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

ஜான் ஆபிரகாமின் மாருதி சுஸுகி ஜிப்ஸியை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது கோலாட் விலங்குகள் சரணாலயத்தில் பயன்படுத்தி வருகிறது. விலங்குகளை மீட்கவும், சிகிச்சை அளிக்கவும், மும்பை மற்றும் கோலடுக்கு இடையே மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் அந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

ஜான் ஆபிரகாம் கடந்த 5 ஆண்டுகளாக, அதாவது கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், பல்வேறு உதவிகளை அவர் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜான் ஆபிரகாம் தற்போது நன்கொடையாக வழங்கியுள்ள மாருதி சுஸுகி ஜிப்ஸியை தனது மாடலிங் நாட்களின் ஆரம்ப கால கட்டத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

இந்த காரை அவர் ஓட்டி வருவதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. மாருதி சுஸுகி ஜிப்ஸி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கார் ஆகும். குறிப்பாக ஆஃப் ரோடு பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்கள் அதிகமாக நேசிக்க கூடிய கார் என மாருதி சுஸுகி ஜிப்ஸியை கூறலாம். சவாலான நிலப்பரப்புகளில் மாருதி சுஸுகி ஜிப்ஸி சிறப்பாக செயலாற்றும்.

சூப்பர்... மாருதி ஜிப்ஸியை நன்கொடையாக வழங்கிய பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம்... எதற்காக தெரியுமா?

இந்திய ராணுவம் அதிகப்படியான மாருதி சுஸுகி ஜிப்ஸி கார்களை பயன்படுத்தி வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இந்திய ராணுவத்திற்கும், மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கும் இருந்த பந்தம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஒரு காரை தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு பாராட்டுக்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Film Actor John Abraham Donated His Gypsy To NGO. Read in Tamil
Story first published: Thursday, September 10, 2020, 0:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X