விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு இவ்வளவுதான் அபராதம்.. போலீசாரால் இனி வசூல் வேட்டை நடத்த முடியாது..

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை விட அதிகமாக வசூல் செய்யும் போலீசார் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By Arun

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை விட அதிகமாக வசூல் செய்யும் போலீசார் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக பரிதாபமாக உயிரிழக்கின்றனர். பல லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே, சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

ஆனால் சில இடங்களில், போலீசார் அதிகப்படியான அபராதம் விதிப்பதாகவும், தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயங்களில், அது கைகலப்பில் சென்றும் முடிந்து விடுகிறது.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, புதிய பட்டியல் ஒன்றை, புனே போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். என்னென்ன குற்றத்திற்கு எவ்வளவு அபராதம்? என்பது குறித்த முழுமையான தகவல்கள், அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

மொத்தம் 42 போக்குவரத்து விதிமீறல்கள், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 200 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்தினால் மட்டும் போதுமானது.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

லைசென்ஸ் பெறாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் (Without License) 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் லைசென்ஸ் எடுத்து வராத (Not Carrying License) வாகன ஓட்டிகளுக்கான அபராதம் 200 ரூபாய். ஆனால் ஒரிஜினல் லைசென்ஸை எப்போதும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

ஏனெனில் போலீசார் கேட்கும்போது, டிஜி லாக்கர், எம் பரிவாகன் போன்ற மொபைல் ஆப்களுடன் (Mobile App) இணைக்கப்பட்ட டிஜிட்டல் லைசென்ஸை காட்டினாலே போதுமானது. டிஜிட்டல் லைசென்ஸை ஏற்று கொள்ள வேண்டும் என மத்திய அரசே உத்தரவிட்டுள்ளது.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

வாகனங்களின் நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அதை மீறி, பேன்ஸி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை 1,000 ரூபாய். ஹெல்மெட் அணியாத (Without Helmet) இரு சக்கர வாகன ஓட்டிகள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படும் என ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளும், தேவையில்லாமல் ஹாரனை ஒலிக்கும் வாகன ஓட்டிகளும் (Honking in Silence Zone) 200 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். காரில், சீட் பெல்ட் அணியாததற்கான அபராத தொகையும் 200 ரூபாய்தான்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

நோ பார்க்கிங் (No Parking) ஏரியாவில் வாகனம் நிறுத்துபவர்களும், 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் முறைகேடாக ரேஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கான அபராத தொகை 2,000 ரூபாய்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

ஒவ்வொரு பகுதியிலும் இந்த வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என போலீசார் வரையறை செய்துள்ளனர். ஸ்பீட் லிமிட் தொடர்பான பலகைகள் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதனை மீறி அதிவேகத்தில் பறக்கும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் 1,000 ரூபாய்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

விபத்துக்களை தவிர்ப்பதில் வாகனங்களின் சைடு மிரர்களுக்கு (Side Mirror) முக்கிய பங்குள்ளது. ஆனால் ஒரு சிலர், ஸ்டைல் என கருதி, சைடு மிரர்களை அகற்றி விடுகின்றனர். ஆனால் சட்டப்படி அது தவறு. சைடு மிரர் இல்லாத வாகனங்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 2,000 ரூபாய். இதேபோல் இதர குற்றங்களுக்கு எவ்வளவு தண்டனை என்பதும் அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. புனே போலீசார் வெளியிட்டுள்ள பட்டிலை நீங்கள் கீழே காணலாம்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

அபராதம் விதிப்பதில், வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை காட்டிலும் அதிகப்படியான தொகையை போலீசார் வசூலித்தால், புகார் அளிக்கும்படி, வாகன ஓட்டிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு? பட்டியல் வெளியானது..

அதிக அபராதம் விதிக்கும் போலீசார் குறித்து, சமூகவலைதளங்கள் மூலமாக, புகார் அளிக்கலாம். அல்லது 100க்கு போன் செய்தோ, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றோ, புகார் அளிக்கலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fine Amount For Traffic Violations. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X