புதிய ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு! வாங்குன முதல் நாளே ஸ்கூட்டர பிரிச்சு மேஞ்சிட்டாங்க! வைரல் வீடியோ!
புதிதாக ஸ்கூட்டர் வாங்கியவர் பதிவு வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகம் சென்ற இடத்தில் பாம்பு ஒன்று அவரது ஸ்கூட்டருக்குள் புகுந்ததால் அந்த ஸ்கூட்டரை தீயணைப்பு துறையினர் அக்கு அக்காக பிரித்து மேய்ந்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொதுவாக புதிதாக வாகனம் வாங்கியவர்கள் வாகனம் வாங்கிய பின்பு அந்த வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்து அங்கு அதற்கான பதிவு எண்ணை வாங்கி செல்வார்கள்.

இப்படிதான் இன்று காலையும் பதிவு எண் வாங்குவதற்காக வரிசையாக வாகனங்கள் எல்லாம் திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் வரிசை கட்டி நின்றன. இந்நிலையில் ஆர்டிஓ அலுவலக கிரவுண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய வாகனங்கள் பகுதிக்கு சாரைப்பாம்பு ஒன்று வந்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள புதரில் மறைந்த பாம்பை தேடி பிடித்தனர். அப்பொழுது முதலில் மறைந்திருந்த மற்றொரு பாம்பு பயந்து அடித்து வெளியே ஓடி வந்தது.

அதைக் கண்டதும் அங்கிருந்தவள் மீண்டும்அலறியடித்து ஓட அந்த பாம்பு புதிய பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு சென்றது. அங்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள அங்கிருந்த ஒரு ஸ்கூட்டருக்குள் ஏறி மறைந்து ஒளிந்து கொண்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த ஸ்கூட்டருக்குள் நுழைந்த பாம்பை எப்படியாவது பிடிக்க வேண்டும் என முயற்சி செய்தனர்.
பாம்பு இந்த பக்கம் பிடிக்க போனால் அந்த பக்கம் செல்வதும், அந்த பக்கம் பிடிக்க போனால் இந்த பக்கம் செல்வதும் என தீயணைப்பு துறையினருக்கு ஆட்டம் காட்டியது. பின்னர் இந்த பாம்பை பிடிக்க தீயணைப்பு படையினர் பைக்கை அக்கு அக்காக பிரித்தெடுக்க முடிவு செய்தனர்.

புதிய பைக்கை தனித்தனி பாகங்களாக கழட்டி அந்த பாம்பை ஒருவழியாக தீயணைப்பு படையினர் பிடித்தனர். இந்தப் பாம்பை பிடிக்க சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதி போர்க்களமாகவே காட்சி அளித்தது. ஒரு வழியாக பைக்கிற்குள் சென்ற நான்கு அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது.
பாம்பை பிடித்தது என்னவோ அங்கிருந்து அவர்களுக்கு சந்தோசம் தான். ஆனால் அந்த பைக் உரிமையாளரின் கதி என்ன? பாவம் பாம்பை பிடிக்க புதிய பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து எடுக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. மழைக்காலங்களில் இப்படியாக பாம்புகள் தனது இருப்பிடத்தை மாற்றி வெளியே வரும் அப்பொழுது உங்கள் பைக் அருகே இருந்தால் உங்கள் பைக்கிற்குள் சென்று அமர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
இதனால் நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் பைக்கை நிறுத்தி இருந்தால் திருப்பி பைக்கை எடுக்கும் பொழுது அனைத்து இடங்களிலும் ஒரு முறை செக் செய்துவிட்டு நன்றாக பைக்கை தட்டி விட்டால் உள்ளே பாம்பு இருந்தால் உங்களுக்கு தெரிந்து விடும் இதனால் நீங்கள் பாம்பிடம் இருந்து தப்பிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாம்புகள் பைக்கிற்குள் சென்று அமர்ந்தால் அதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் இதனால் பாம்புகள் இருக்கும் இடம் என தெரிந்தால் நீங்கள் அங்கே பைக்கை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். மீறியும் பைக்கை நிறுத்த வேண்டியது இருந்தால் திருப்பி பைக்கை எடுக்கும்போது அதை நன்றாக செக் செய்ய வேண்டும். பாம்புகள் பைக்கிற்குள் புகுந்து விட்டால் அந்த பைக்கை அக்கு அக்காக பிரிப்பதை தவிர வேறு வழி இல்லை.


Click it and Unblock the Notifications









