மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்கினால் உடனே இப்படி மாத்திடனும் - மஞ்சள் நிறத்தில் பார்க்க என்னமா இருக்கு!!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் மக்கள் அதிக பேரால் வாங்கப்பட்ட கார்களுள் முதன்மையானது. குறிப்பாக, மாருதி சுஸுகி ஆல்டோ கார்களின் ஆதிக்கம் குறைய துவங்கியதற்கு பிறகு நிறைய ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாக துவங்கின. மற்ற எந்த கார்களும் இல்லாத எண்ணிக்கைகளில் ஸ்விஃப்ட் கார்களை மஞ்சள் நிறத்தில் சாலையில் காண முடியும். ஆனால், கடந்த 2024 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை யாரும் இதுவரையில் மஞ்சள் நிறத்திற்கு மாற்றாமல் இருந்தனர். அந்த குறையும் தற்போது நீங்கியுள்ளது.

ஏனெனில், இங்கு ஒரு நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் கார் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், காரின் நிறத்தை தனது விருப்பத்திற்கு ஏற்றப்படி மாற்றிக் கொள்வதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது (தனி நபரை அல்லது சமூகத்தை பாதிக்காத வரை).

2024 swift car in yellow

மஞ்சள் நிறத்திலான கார்களை பரவலாக உங்களால் சாலையில் காண முடியாது. மாருதி சுஸுகி நிறுவனம் கூட ஸ்விஃப்ட் காருக்கு மஞ்சள் நிற பெயிண்ட் ஆப்ஷனை வழங்குவதில்லை. ஆனால், சில ஸ்விஃப்ட் கார் உரிமையாளர்கள் தங்களது காரை மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.

அந்த வகையில், கடந்த மே மாதத்தில் முதல்முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஒன்று பளபளப்பான மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மஞ்சள் நிற ஸ்விஃப்ட் கார் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த ஸ்விஃப்ட் காரை ஓட்டி பார்த்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

2024 swift car in yellow

சில வெளிநாட்டு மார்க்கெட்களில் மஞ்சள் நிறத்தில் சுஸுகி ஸ்விஃப்ட் கார் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் இத்தகைய நிறத்தில் இந்த கார் கிடைப்பதில்லை என்பதால், இவ்வாறு தங்களது விருப்பத்திற்கேற்ப பெயிண்ட் செய்துக் கொள்கின்றனர். மஞ்சள் நிற பெயிண்ட்டை கொடுத்திருப்பதுடன், இந்த குறிப்பிட்ட ஸ்விஃப்ட் காரில் வேறு சில மாற்றங்களையும் கொண்டுவந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

குறிப்பாக, காரின் புதிய அலாய் சக்கரங்கள் நம் கவனத்தை பெறுகின்றன. அதேபோல், காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்களை சுற்றி சிவப்பு நிறத்தில் ஒளியை பார்க்க முடிகிறது. மஞ்சள் நிற காருக்கு இத்தகைய சிவப்பு நிற வெளிச்சம் மிகவும் எடுப்பாக உள்ளது. ஆகையால், இதுவரையில் நாம் பார்த்துள்ள மாடிஃபை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களில் இதனை மிகவும் ஸ்டைலிஷனதாக சொல்லலாம்.

2024 swift car in yellow

ஏற்கனவே கூறியதுபோல், நம் நாட்டில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. காரின் நிறத்தை விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு கூட முதலில் நீங்கள் ஆர்டிஓ-இல் முறையாக இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். புதிய நிறத்திற்கு மாற்றிய பின், அந்த காரை ஆர்டி அலுவலகத்திற்கு கொண்டு சென்று, காரின் பதிவு சான்றிதழில் காரின் புதிய படங்களை சேர்க்க வேண்டும்.

கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் பல முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது, புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் இசட்12இ பெட்ரோல் என்ஜின் ஆகும். அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் 112 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஞ்சள் நிறத்திலான கார் நிச்சயமாக போக்குவரத்து நெரிசலிலும் தனியாக தெரியும். அதேபோல், இரவு நேரத்தில் காரின் மஞ்சள் நிறம் பளிச்சென்று தெரிகிறது. இதனால்தான், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இரவு நேரத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். மஞ்சள் நிறத்தில் இந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 30, 2024, 8:00 [IST]
English summary
First 2024 maruti suzuki swift car in bright yellow colour check all details here
மேலும்... #car modification #swift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X