பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்த்திடனும்...!

ஏர் இந்தியா (Air India) ஏர்லைனின் முதல் ஏ350 விமான சேவை தலைநகர் டெல்லி - துபாய் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவிடம் பல்வேறு விமானங்கள் சேவைகளில் உள்ளன. இருப்பினும், ஏ350 விமானத்தை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம் என்ன? மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏன் அவ்வளவு ஸ்பெஷலானது? இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏர் இந்தியா, இந்தியாவின் மிக பெரிய மற்றும் முக்கியமான ஏர்லைன். இந்தியாவின் முன்னணி ஏர்லைனாக இருப்பதினாலேயே உலகளவில் பரந்த சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்ட ஏர்லைன் நிறுவனமாக ஏர் இந்தியாவை சொல்லலாம். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் இப்போதுதான் அதன் முதல் ஏ350 விமான சேவையை துவங்கியுள்ளது.

air india s first a350 flight

ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கும் ஏ350-900 விமானங்கள் உலகம் முழுவதும் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், அவற்றின் அளவில் பெரிய தோற்றமும், அவற்றின் லக்சரியான உள்கட்டமைப்பு வசதிகளே ஆகும். இதன் காரணமாக, உலகில் பல்வேறு ஏர்லைன் நிறுவனங்கள் ஏர்பஸ் ஏ350 விமானங்களை தங்களது சேவைகளில் கொண்டுள்ளன.

ஆனால், ஏர் இந்தியா ஏர்லைன் இப்போதுதான் தனது முதல் ஏ350 விமான சேவையை டெல்லி மற்றும் துபாய் நகரங்களுக்கு இடையே மேற்கொண்டுள்ளது. இதனை படத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமானம் மே 1ஆம் தேதி இரவில் துபாயில் தரையிறங்கியது.

மேலும், விமானத்தின் கேபினுள் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களையும் விளம்பர நோக்கத்தில் ஏர் இந்தியா தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. இந்த பதிவுகளில், ஏர் இந்தியாவின் ஏ350-900 விமானத்தின் பிரம்மாண்டத்தையும், லக்சரியான உள்கட்டமைப்பு வசதிகளையும் காண முடிகிறது. குறிப்பாக, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், ஏ350 விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் பொழுதுப்போக்கு விஷயங்களையும் ஏர் இந்தியா தெளிவாக காட்டியுள்ளது.

இவ்வாறு, ஏ350 விமானத்தை பயணிகள் பயன்படுத்துவதை பல்வேறு வழிகளில் ஏர் இந்தியா ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா ஏ350 விமானத்தின் முதல் பயணம் டெல்லி மற்றும் துபாய் என இரு நகரங்களின் விமான நிலையங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டன. மேலும், இந்த முதல் பயணத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு நினைவு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மற்றும் துபாய் விமான துறையின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர். ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த பிரம்மாண்ட விமானத்தில் மொத்தம் 3 வகுப்புகள் உள்ளன. இந்த 3 வகுப்புகளில் எக்கானமி வகுப்பில் 264 இருக்கைகள், பிரீமியம் எக்கனாமி வகுப்பில் 24 இருக்கைகள் மற்றும் பிஸ்னஸ் வகுப்பில் 28 இருக்கைகள் என மொத்தம் 316 இருக்கைகள் உள்ளன.

இந்த 316 இருக்கை பயணிகளுக்கும் பானாசோனிக்கின் இ.எக்ஸ்3 பிளைட் பொழுதுப்போக்கு எச்டி திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எச்டி திரைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை தொடர்ச்சியாக சுமார் 2,200 மணிநேரத்திற்கும் மேல் பார்க்க முடியும். அதாவது, அந்த அளவிற்கு நிறைய விஷயங்கள் இந்த திரைகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

air india s first a350 flight

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் கடந்த ஆண்டில் 470 விமானங்களுக்கு மெகா ஆர்டர் செய்திருந்தது. இதில் ஏர்பஸ் ஏ350-900 விமானங்களும் இருந்தன. ஆர்டர் செய்யப்பட்ட ஏ350 விமானங்கள் இந்த ஆண்டில் ஏர் இந்தியாவிடம் டெலிவிரி செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சில பல சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஏர் இந்தியாவின் முதல் ஏ350 விமான பயணம் துவங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 23:59 [IST]
English summary
First air india a350 flight service from delhi to dubai check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+