ராமர் கோயில் திறப்புக்கு என்னென்ன பண்றாங்க பாருங்க!! அயோத்திக்கு எல்லா வழியிலும் வரலாம்!
அயோத்தி (Ayodhya)-க்கு டெல்லியில் இருந்து வெறும் 80 நிமிடங்களில் சென்றுவிடும் வகையில் ஏர் இந்தியா தனது முதல் விமான சேவையை வழங்கவுள்ளது. அயோத்தியில் திறக்கப்படவுள்ள முதல் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-இன் விமானம் டிசம்பர் 30ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட உள்ளது.
இந்தியாவின் முக்கிய போக்குவரத்துகளுள் ஒன்றாக விமானம் மாறி வருகிறது. அருகில் உள்ள நகரத்துக்கு செல்வதற்கு கூட விமானத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையாக விமான நிலையங்களின் எண்ணிக்கை நம் நாட்டில் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில், அயோத்தியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சரயு நதிகரையில் அமைந்துள்ள நகரம் அயோத்தி. இந்து மத புனித தலங்களை அதிகளவில் கொண்டுள்ள இது, நம் பாரத பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியும் கூட. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட அயோத்திக்கு வருகிற ஜனவரி மாதத்தில் மற்றொரு சிறப்பும் வந்து சேர போகிறது.
ஜனவரி 22ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோயில் திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு நாடு முழுவதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராமர் கோயில் திறப்புக்கு உத்தர பிரதேச அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் ஏற்கனவே தயாராக ஆரம்பித்துவிட்டன.

திறக்கப்பட்ட பின், நிறைய பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வருவர் என்பதால் விமான நிலையம் அயோத்திக்கு அவசியம் என உணர்ந்து எப்போதோ அதற்கான வேலைகளை மத்திய அரசு ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. அயோத்தியில் ஒரு நல்ல இடமாக பார்த்து, விமான நிலையம் எழுப்பப்பட்டு, விமானம் டேக்-ஆஃப் & லேண்டிங்கிற்கு தயாராகிவிட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் அதன் முதல் விமானத்தை அயோத்தியில் இருந்து டிசம்பர் 30ஆம் தேதி டெல்லிக்கு இயக்க உள்ளது. ஏர் இந்தியாவின் டயர்2 மற்றும் டயர் 3 நகரங்களுக்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துணை நிறுவனத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவை வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 30ஆம் தேதியன்று அறிமுக பயணம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை போடப்பட்டு தினசரி விமான சேவைகள் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு 'மிகவும் கண்ணியமான மனிதர் ஸ்ரீ ராம்' சர்வதேச விமான நிலையம் என பெயர் இந்தி மொழியில் சூட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரன்வே ஆனது ஏ321/ பி-737 டைப் விமானங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அயோத்தி விமான நிலையத்திற்கு முதலாவதாக லேண்டிங் ஆக உள்ள ஏர் இந்தியா விமானம், ஐ.எக்ஸ் 2789 ஆகும். டிசம்பர் 30, சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்படவுள்ள இந்த ஏர் இந்தியா விமானம் மதியம் 12.20 மணியளவில் அயோத்தியில் லேண்டிங் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பயணம் வெறும் 80 நிமிடங்கள் மட்டுமே இருக்குமாம்.

பின்னர் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா ஐ.எக்ஸ் 1769 விமானம் டெல்லிக்கு புறப்படும். முதல் விமானம் மதியம் 12.20 மணியளவில் லேண்டிங் ஆன பின்பு அடுத்த 30 நிமிடத்தில், அதாவது 12.50 மணியளவில் ஏர் இந்தியா ஐ.எக்ஸ் 1769 டெல்லிக்கு டேக்-ஆஃப் ஆகும். இந்த விமானம் அதே 80 நிமிட பயணத்திற்கு பிறகு பிற்பகல் 14.10 மணியளவில் டெல்லியில் லேண்டிங் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராமர் கோயில் திறந்த பின்பு நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களும், விஐபி-களும் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் இருந்தும் அயோத்திக்கு பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால், அயோத்திக்கு ஒரு விமான நிலையம் அவசியமே. அதனை உள்நாட்டு விமான நிலையமாக மட்டும் வழங்காமல், சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









